பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/461

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்

449


இது பட்டுக்கோட்டையின் பாடல், உழைப்பு ஆற்றல் வாய்ந்தது. நல்ல ஆற்றல் வாய்ந்த உழைப்பாளி வாய்ப்புக்களை எதிர்பார்த்துக் காத்திருக்க மாட்டான். அவனே வாய்ப்புக்களை உருவாக்கிக் கொள்வான்.

உழைக்கும் உள்ளம் பெற்ற ஒருவன் தனக்கு வாய்த்திருக்கிற கருவிகள், களங்கள், வசதிகள் ஆகியவை பற்றிக் கூடக் கவலைப்பட மாட்டான்! "பொறியின்மை யார்க்கும் பழியன்று” என்ற வள்ளுவம், இவன் வாழ்க்கையின் விளக்கம். ஏன், உடலில் ஊனம் இருந்தால் கூட அவன் அஞ்சுவதில்லை. திடமான மனத்துடன் திறமை சான்ற உழைப்பைச் சாதனமாகக் கொண்டு உலகில் வெற்றி பெறுகின்றான்.

ஜெயகாந்தனின் "நான் இருக்கிறேன்” என்ற சிறு கதையில் சில வரிகள் இந்த உணர்வுகளை நமக்கு ஊட்டுகின்றன.

"காலு இல்லாட்டிப் போனா என்னாய்யா? கையாலே இந்த உலகத்தையே வளைக்கலாமே! வாழறதுக்குக் காலும் கையும் வேணாமய்யா. நல்ல மனசு வேணும்! அறிவு வேண்டும்! மனுசனோட அறிவு யானையைக் காட்டிலும், சிங்கத்தைக் காட்டிலும் வலுவானது. இல்லேங்கறதுக்காகச் செத்து இருந்தா மனுச சாதியே பூண்டத்துப் போயிருக்கும் காலு இல்லாட்டி அது இல்லாத கொறையை மாத்திக்கிட்டு எப்படி இருக்கிறதுன்னு யோசிக்க ஆரம்பிச்சேன்னா காலு இருக்கிறவங்களைக் காட்டிலும் நீ வேகமா ஓடிட மாட்டியா?” என்று வியாதிக்காரன் மூலம் நொண்டியை ஊக்கப்படுத்தும் ஜெயகாந்தனின் அறிவுரை கொள்ளத்தக்கது.

ஆம்! உடலில் ஊனம் என்பது வாழ்க்கையைக் கெடுக்கக் கூடியதன்று! ஆனால், உடலில் ஊனம் என்ற நினைப்பு இருக்கிறதே, அது ஆளை அரித்து கொன்று விடும்! உடல் ஊனங்கள் அலட்சியப்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் வாழ்க்கை இன்பமாக அமையும். மீண்டும்