பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/473

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்

461


இன்று நமது நாட்டில் 77 விழுக்காட்டு மக்கள் எழுத்தறிவில்லாதவர்கள். 589 விழுக்காட்டு மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்கிறார்கள். இந்த இழிநிலை என்று மாறும்? இந்நிலையை "கனவோ நனவோ" என்ற கதையில் சக்திப் பெருமாள் விவரிப்பதைக் கேளுங்கள்.

"வாய் திறக்க வழியின்றி அலுவலகத்தை நோக்கி நகர்ந்தேன், 'தனியொருவனுக்கு உணவில்லையெனில் சகத்தினை அழித்திடுவோம்" என்று என்னையறியாமலேயே என் வாய் முணுமுணுத்தது. பாரதியின் உள்ளக் குமுறல் - குருதிக் கொதிப்பு இப்படி எத்தனை காட்சிகளைக் கண்டதோ? தனியொருவன்கூட உணவின்றி நலியாத சமுதாயம் என்றுதான் உருவாகுமோ? கனல்தெறிக்கப் பறந்த அவனது வார்த்தைகள் இவ்வுலகை புடமிட்டுப் பொன்னாக் காதோ? அவனது கனவு நனவாகும் நாள் எந்நாளோ? எழுந்த வினாக்கள் அலுவலகத்துக்குள் நுழைந்தவுடன் உள்ளத்தையே புதைத்துவிட்டன." (வெள்ளையங்கி பக். 96) என்கிறார் சக்திப் பெருமாள்.

இத்தனை பேர் எச்சரித்த பிறகு, ஏன் சமூகத்தில் இந்த அவலம் தொடர்கதையாக இருக்கிறது? சமூக நீதி ஏன் உருவாக்வில்லை? ஆசைதான் காரணம். அப்பட்டமான - நிர்வாணத் தன்மையுடைய - தன்னலம் சார்ந்த ஆசை, நீதியை, சமூக நீதியை பலி கொடுத்து செல்வத்தைக் குவிக்கத் துணை செய்கிறது. இந்தக் கொள்ளைக்கு அதிகாரமும் துணையாக நிற்கிறது. இந்த இழிநிலையைப் பட்டுக் கோட்டையின் வார்த்தைகளிலேயே கேளுங்கள்.

       "ஆசைக்கு நீதி இரையாகுதடா! அன்பை
       அதிகார வெள்ளம் கொண்டு போகுதடா"

இன்றைய சமூகப் போக்கு நியாயங்களை எடுத்துச் சொல்லுவது மாதிரியும் இல்லை! இன்று எங்கு பார்த்தாலும் காசும் உழைப்பும், காசும் கண்ணியமும் என்று காசுடன்