பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/476

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

464

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அந்த இனிய நல்ல முயற்சி தோல்வியடையுமென்று அச்சப்பட்டுக் காரியத்தை விட்டுவிடக் கூடாது.

தோல்விகளும்கூட எதிர்பார்த்து நிகழ்ந்தால் வெற்றி களைப் போல கருதிக் கொள்ள முடியும். "தோல்விகள் வெற்றிகளின் படிகள்” என்ற பழமொழியை எண்ணிக் கொள்ள வேண்டும். இந்தக் கருத்தினை ஜெயகாந்தன் தமது 'யுகசந்தியில் விளக்குகிறார்.

"வெற்றி - என்ற வார்த்தைக்குப் பொருளில்லை. நினைத்தது நடந்தால் வெற்றி என்று நினைத்துக் கொள்கிறோம். தோல்வி நிச்சயம் என்று எண்ணித் தோற்றால், அந்தத் தோல்வியே வெற்றிதான்."

(யுகசந்தி - தர்க்கத்திற்கு அப்பால்' - ஜெயகாந்தன் பக். 99)

ஆனாலும் ஒருசிலர் வெற்றிபெற்ற சூழ்நிலையில், போதைக்கும், மமதைக்கும் ஆளாகிவிடாமல், பெற்ற வெற்றியைப் பெரிதென எண்ணாமல் தொடர்ந்து முயற்சிப்பர்;துணிந்து புதிய முயற்சிகளில் அடி எடுத்து வைப்பர். இவர்கள் வெற்றி மேல் வெற்றியும் பெறுவர். இக்கருத்தை வல்லிக்கண்ணன் தமது கதை மூலம் கூறுவதைக் கேளுங்கள்.

"வாழ்க்கைப் பாதையில் துணிந்து அடி எடுத்து வைத்து வெற்றி கண்டவனே அடுத்து அடுத்து வெற்றிகளைச் சந்திக்க முடிகிறது. முதல் வெற்றி மேலும் பல வெற்றிகளைக் கொண்டு சேர்க்கிறது. அதனாலேயே "வெற்றிபோல் எதுவும் வெற்றி பெறுவதில்லை" என்ற ஆங்கில வசனம் ஏற்பட்டுள்ளது" - (வாழ விரும்பியவன் - வல்லிக்கண்ணன் பக். 38)

மனித சமூகத்தில், புராணங்களில், இதிகாசங்களில் மகளிர்க்குத் தனி இடம் - உயர்ந்த இடம் உண்டு. மதங்களிலும் அப்படித்தான். ஆனால் நடைமுறையில் நாம் நம்முடைய சமூகத்தில் பெண்களை நடத்தும் முறை