பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/49

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதி ஒரு யுகசந்தி

37


கடவுளை, சாத்திரங்களை அறிந்து வாழாது போனாலும் இவைகளைப் பற்றி ஆர்ப்பரவம் செய்யும் சாத்திரங்களை, அவைகளின் உண்மைகளை அறிந்து கலியுகத்தார் ஆராயமாட்டார்கள். சமுதாயத்தை மோசம் செய்யும் ஒருவன், பொய்ச் சாத்திரங்களைக் கட்டுக்கதையாகச் சொன்னாலும் கேட்பார்கள்-கலியுகத்தில் பிரிவினைகள் தோன்றும். கோத்திரம் ஒன்றாக இருந்தாலும் பிரிந்தே விடுவார்கள். பிரிதல் மட்டுமன்று. ஒருவரோடொருவர் பகையும் கொண்டு இகழ்ந்தும் கொள்வார்கள். சூது செய்யும் நீசர்கள் போற்றப்படுவார்கள். ஒன்று பரம் பொருள் என்று துணியாது, சிவன் என்றும், விட்டுணு என்றும் சண்டை போட்டுக் கொள்வார்கள். இத்தகைய கலியுகத்தின் நடை முறையால் மக்கள் பஞ்சத்தில் வாடுகின்றனர்; குடிக்கக் கஞ்சியுமில்லை! கஞ்சிதான் இல்லை! ஏன், கஞ்சியில்லை என்று கேட்டால் சொல்லத் தெரியுமா? என்றெல்லாம் கலியுகத்தின் துன்பத்தைச் சித்திரமாக்கி பாரதி காட்டு கின்றான். ஆதலால், பாரதி இந்தக் கலியுகத்தைக் கடிந்து கிருதயுகத்தைக் கொணர முயற்சி செய்கின்றான்.

பாரதிக்குச் சாத்திரங்களில் நம்பிக்கையில்லாமற் போய் விட்டது என்று சொல்ல முடியாது.

"... மிகு சாத்திரங் கண்டு
தருவதிலே உயர்நாடு!”

என்று பாடுகின்றான். ஆனாலும் இந்த நாட்டில் கலியுக தேவதையின் கொடிய படைப்புக்களாகிய சாதிகளைப் பார்க்கின்றான். அந்தச் சாதி வேற்றுமைகள் சழக்குகளாக உருவெடுத்துச் சமுதாயச் சீரழிவைத் தருவதைப் பார்க் கின்றான். இந்தப் பொல்லாத சாதிகளைச் சில பொய்ம்மைச் சாத்திரங்கள் அரண் செய்கின்றன. கடவுளை இந்தச் சாதியார்தான் பூசனை செய்யலாம்; மடத்தின் தலைவராக இந்தச் சாதியார்தான் வரலாம் என்று இப்படி எண்ணத்