பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தொலையாத சாதிகள்! அதுவும் கடவுள் பெயரால் கற்பித்துக் காட்டும் பொய்ம்மைச் சாத்திரங்களை பாரதி சாடுகின்றான். "சாத்திரமின்றேல் சாதியில்லை" என்கின்றான்.

பொய்ம்மையான சாத்திரம் நாட்டில் புக அனுமதித்தால் மக்கள் புழுவென மடிவர் என்று எச்சரிக்கை செய்கின்றான். சாதிப்பாகுபாட்டில் உயர் இடத்தைப் பெற்றவர்கள் சாத்திரத்தை வகுக்கும் உரிமை பெற்றனர். ஆனால், ஐயகோ! அவர்கள் நெறிபிறழ்ந்துத் தாழ்வான சாத்திரங்களை - பொய்ம்மையைச் செய்து தந்தனர். அதனால், பாழ்த்த கலியுகம் மூண்டது என்பான் பாரதி.

கலியுகத்தின் மிகப் பெரிய கொடுமை பெண்ணை அடிமைப்படுத்துதல், கலியுகத்தில் சிலர் ஈசனின் திரு. வுள்ளத்திற்கு எதிராகவே செயல்பட்டனர் என்கின்றான் பாரதி. ஆம்! புவி பேணி வளர்த்திடும் ஈசன், பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான். ஆனால் இந்த மூடர்கள் மாதரறிவைக் கெடுத்தார்கள். எனவே பாரதி, கிருத யுகத்தைப் படைக்கும் வழியில் பெண்களுக்கு விடுதலை கேட்கின்றான். பெண்களறிவை வளர்க்கச் சொல்கின்றான்.

"கண்கள் இரண்டில் ஒன்றைக்-குத்தி
காட்சி கெடுத்திட லாமோ?
பெண்க ளறிவை வளர்த்தால் - வையம்
பேதைமை யற்றிடுங் காணீர்” (முரசு-10)

என்று பாடுகின்றான்.

அது மட்டுமா? கலியுகம் சொத்தில் மட்டும் தற்சார் புடையதல்ல. எல்லாவற்றிலும் ஆடவர் கொலை பாதகமான ஆதிக்கம் புரிந்தனர். நிலத்திற்கு வேலி போட்டனர்; பெண்ணுக்குக் கற்பென்று கூறி வீட்டில் பூட்டிப் போட்டனர். ஆம்! கலியுகப் பெண், கணவன் பரத்தை வீட்டுக்குப் போகத் துணை போவாள். ஏன்? தூக்கிச் சுமந்து கொண்டு போய்க்