பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதி ஒரு யுகசந்தி

43


கொழிக்க வேண்டும். இந்த மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கையில் இடையீடின்றித் திளைத்திருக்கக் காவலும் வேண்டும். இது பாரதி விரும்பிய வாழ்க்கை, "வீடு தோறும் கலையின் விளக்கம்” என்று பாடியதற்கு இது விரிவுரை, மீண்டும் பாரதியின் பாடலைக் கேளுங்கள்!

“வீடு தோறும் கலையின் விளக்கம்;
வீதிதோறும் இரண்டொரு பள்ளி;
நாடு முற்றிலும் உள்ளன வூர்கள்
நகர்க ளெங்கும் பலபல பள்ளி
தேடு கல்வியி லாததொ ரூரைத்
தீயினுக் கிரை யாக மடுத்தல்
கேடு தீர்க்கும் அமுதமென் அன்னை
கேண்மை கொள்ள வழியிவை கண்டீர்!”
(வெள்ளைத் தாமரை-5)

பாரதி, இங்ஙனம் வாழ்தலே வாழ்க்கையென்று எண்ணுகின்றான். இத்தகு மகிழ்ச்சி நிறைந்த சிந்தனையிலும் பாரதிக்குக் கோபம் வராமல் இல்லை. சிறந்த கல்வியைத் தராத ஊர் இருக்குமானால் அந்த ஊரைத் தீக்கொளுத்தி விட வேண்டும் என்று பாடுகின்றான். கல்வி இல்லாத மக்களை வைத்திருக்கும் ஊர் கேடு தரும், அதனால் அந்த ஊரைத் தீக்கொளுத்தி விடுதலே கேடு தவிர்க்கும் என்கின்றான். பாரதி, கல்வியின் கலையின் இன்றியமை யாமையை வலியுறுத்தும் பாங்கை அறிந்து, இத்தகைய சமுதாயம் அமைய நாம் அனைவரும் முயலவேண்டும்.

பாரதி, எல்லாருக்கும் கல்வி கிடைக்காத கலியுகத்தில் பிறந்தான். அதுவும் பாரதி வாழ்ந்த கலியுகத்தில் ஏழைக்குக் கல்வி - கிடைக்கவில்லை என்பதை "ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்” என்பதன் மூலம் விளக்கினான். எல்லாருக்கும் கல்வி கிடைக்கும் யுகமே கிருதயுகம் என்கின்றான். நம் நாடு விடுதலை பெற்ற பிறகு பாரதியின் ஆணையை மேற்