பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கின்றனர். ஏன் பகையைக்கூட வளர்த்து அழிவு செய்திருக் கின்றனர். பாரதி, இந்தக் கலியுகத்தை விரும்பவில்லை . ஒத்துப்போகக் கூடிய செய்திகளிலெல்லாம் ஒத்துப்போக வேண்டும் என்று கருதுகின்றான். ஒத்துப் போதல் என்பது முதற்கொள்கை, அக்கொள்கை வந்த பிறகுதான் பல செய்திகளில் ஒத்துப் போக இயலும். எப்படியும் ஒத்துப் போதல் என்பது கிருத யுகத்தின் குணம். இதனை பாரதி,

"வேறு வேறு பாஷைகள் கற்பாய் நீ
வீட்டு வார்த்தை கற்கிலாய் போ போ போ
நூறு நூல்கள் போற்றுவாய்; மெய் கூறும்
நூலில் ஒத்தியல்கிலாய் போ போ போ
மாறுபட்ட வாதமே ஐந்நூறு
வாயில் நீள ஓதுவாய் போ போ போ!”
(போகின்ற பாரதமும் வருகின்ற பாரதமும்-3)

என்று பாடுகின்றான்.

மேலும் கலியுகத்தில் வேதம் எது? என்று துணிய முடியாத குழப்பம், பலர் தாம் விரும்பிய நூல்களை யெல்லாம் வேதம் என்று சொல்லத் தொடங்கினர். வேதம் என்பதிலும், இந்தச் சமுதாய அளவில் வேதம் எது என்ற கொள்கையிலும், வேதம் சொல்லும் கொள்கையிலும் நிறைய மாறுபாடுகள் தோன்றின. பொதுவாகப் பழைமை எனப் போற்றப் பெற்ற வேதங்கள் மனிதகுலத்தின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் . மேம்பாட்டுக்கும் இசைந்ததாக இல்லையென்று பாரதி நினைக்கின்றான் போல் தெரிகிறது. அதனால் "வேதம் புதுமை செய்” என்று கூறுகின்றான். பாரதி, எது வேதம்? என்ற சர்ச்சையில் இறங்கத் தயாராக இல்லை. பாரதி உண்மையை ஆராதிப்பவன். பாரதிக்குப் பொய்ம்மை கட்டோடு பிடிக்காது. பொய்ம்மையை விரித்துரைக்கும் நூல்களை எற்றி எறியச் சொல்கின்றான். பாரதி; வளர்ந்த தகுதி மிகுதியும் பெற்ற, தெளிவும்