பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


யாடுகின்றனர். இவ்வளவுக்கும் ஆளான பிறரும் கூட அவர் களுக்குக் கோபம் வருவதில்லை. “எல்லாம் கொடுத்து வைத்தது”; “காலம் வந்தால் சரியாய்ப் போய் விடும்” என் றெல்லாம் சமாதானம் சொல்லிக் கொண்டே அழிந்தார்கள், 'நாட்டில் நல்ல சுகாதார வசதிகள் இன்மையால் பெருநோய் வந்தாலும் நாட்டின் அரசைத் தட்டிக் கேட்க மக்களுக்குத் துணிவு வரவில்லை. அரசைக் கண்டு பயந்தனர். அரசைக் கண்டு பயப்படுவதை பாரதி நையாண்டி செய்கின்றான்; கேலி செய்கின்றான். குடிமக்கள் கொடுக்கும் வரியை வைத்து' நாட்டைக் காக்கும் வேலையைச் செய்யும் அரசைக் கண்டு பயப்படுவானேன்? என்று கேட்கிறான். அது மட்டுமா? கலியுகத்து மக்கள் அச்சமே கொள்கையாக வாழ்வதைக் கண்டு பொருமுகின்றான். எதைக் கண்டு அஞ்சுவது என்று ஒரு வரையறை இல்லை என்ற கருத்தில் இவர், கண்டு அஞ்சாத பொருள் எதுவுமில்லை என்று எடுத்துக் காட்டு கின்றான். கொடுமையைக் கண்டு கோபம் கொள்ளாது போனால் வாழ்க்கையில் உயிர்ப்பில்லை என்பது பொருள். . சின்னத்தனங்களைக் கண்டு சீறாது போனால் வாழ்க்கையில் கொடுமையே மிஞ்சும், அதனால் பாரதி, இந்த நாட்டுக் குழந்தைகளை கிருதயுகத்திற்குத் தயார் செய்ய எண்ணி ‘புதிய ஆத்திசூடி' செய்கின்றான். பழைய ஆத்திசூடி கலியுகத்தில் பிறந்தது. ஒளவையார். அருளிச் செய்தது என்பர். நமது நாட்டில் ஒளவையார் என்ற பெயரில் வாழ்ந்தவர் பலர். அவர்களுள் எந்த ஒளவையார் ஆத்திசூடி' செய்தார் என்பது துணிய முடியாத கருத்து. அந்த ஆத்திசூடி கல்லும் மண்ணும் கலந்த அரிசி போன்றது. அதாவது சில நல்லவைகளும் உண்டு. ஆனாலும் ஏற்கெனவே எய்த்துக் களைத்துப் போய், ஊர்வதை ஓட்டம் என்று கருதிக் கொண்டிருந்த சமுதாயம் அது, ஒளவையாரின் ஆத்திசூடி ஊர்வதைக் கூடத் தடுத்துப் படுக்க வைத்துவிடும் தன்மையதாக இருந்தது. அதனால் கிருதயுகத்தைப் படைக்க நினைத்த பாரதி, கிருதயுகத்தைப்