பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மட்டுமன்று. கூடி வாழ்தல், கூடித் தொழில் செய்தல் ஆகியன அடியோடு வெறுக்கப்பட்ட காலம். கூடித்தொழில் செய்தால் தனது தொழில்நுட்பம் பலருக்குத் தெரிந்து விடுமே என்ற பயம். பலர், தொழில் தெரிந்தவராக வந்துவிட்டால் தனக்குரிய பெருமை போய்விடுமே என்ற அச்சம். அதைப் போலவே செய்யத் தெரியாதவராக இருந்தால் தன் தெரியாமை வெளியில் தெரிந்து விடுமே என்ற அச்சம். இன்னபிற எண்ணங்களால் கூடித் தொழில் செய்யாமல் ஒவ்வொருவராக வாழ்ந்ததால் ஒவ்வொருவரும் ஒரே வேலையைத் திரும்பத் திரும்பச் செய்து பயனற்றுப் போயினர். இதனைக் கண்ட பாரதி, கிருதயுகத்தில் இங்ஙனம் வாழக்கூடாது என்று முடிவெடுக்கிறான். வாய்ப்புகளுக்கு ஏற்றவாறு வேலைப் பங்கீடுகள் தேவை. கூடித் தொழில் செய்யவேண்டும். கூடித் தொழில் செய்தால்தான் கோடி சேர்க்கலாம்; மனிதனின் அறிவும் ஆற்றலும் விரிவடையும்; வீணே செலவழிக்காமலும் எஞ்சும், ஆதலால் கிருதயுகத்தின் இயல்பு கூடித் தொழில் செய்தலே. இத்துறையில் பாரதம் பாரதி வழியில் வளர்ந்து வருவது பாராட்டுதலுக்குரியது.

பாரத நாட்டில் நாட்டு மக்கள் கூடித் தொழில் செய்யும் பொதுத்துறையும் கூட்டுறவுத் துறையும் வளர்ந்து வருகின்றன. ஆனால், பல ஜென்மங்களாகத் தனித்துத் தனித்துத் தனிவுடைமை பேணி வாழ்ந்த சமுதாயத்தில் 'பொதுமைக் குணம் போதிய அளவு வளரவில்லை. தனியார் துறையில் நடைபெறும் தொழிலில் இருக்கிற நிர்வாகக் கட்டுக்கோப்பும், ஈட்டும் இலாபமும் பொதுத் துறைக்கு- கூட்டுறவுத் துறையில் போதிய அளவு இல்லை. இதற்குக் காரணம் பொதுமையுணர்வு செழிப்பாக ளராதுதான். ஆயினும் பொதுமைத் திசையில் நாடு திரும்பி விட்டது. மெல்ல வளரும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

பாரதி, ஆசிரியனாக இருந்தும் குழந்தைகளைப் பயிற்றுவிக்கிறான். அதேபொழுது வேடிக்கை, விளையாட்டுப்