பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதி ஒரு யுகசந்தி

53


பெரிய இராஜ தந்திரங்கள் போர்களைத் தவிர்க்கவும், குடிமக்களின் தீய பழக்கங்களைத் தவிர்க்கவும் பயன்பட்ட யுக்திகளேயாகும். தந்திரம் பெருகினாலும் எந்திரங்களும் பெருகி வளரவேண்டும். வியாபாரம் என்பது ஒரு தொழில் மட்டுமல்ல. அதைச் செய்யும் முறைப்படி செய்தால் அஃது ஒரு தொண்டு. பாரதி புதிய கோணங்கியில்

"வேதபுரத்திலே வியாபாரம் பெருகுது;
தொழில் பெருகுது; தொழிலாளி வாழ்வான்.
சாத்திரம் வளருது சூத்திரம் தெரியுது
யந்திரம் பெருகுது; தந்திரம் வளருது:
மந்திர மெல்லாம் வளருது, வளருது."

என்று பாடுகின்றான்.

இப்பாடலில் "தொழில் பெருகுது; தொழிலாளி வாழ்வான்" என்ற சொற்றொடர் கவனத்திற்குரியது. மானிட சாதி தொழில் செய்யத் தொடங்கிப் பல ஆயிரம் ஆண்டுகள் ஓடிவிட்டன. வரலாற்றில் தொழில் செய்யும் கருவிகளைக் கற்களால், உலோகத்தால் செய்து பயன்படுத்திய காலத்தை கற்காலம், உலோக காலம் என்பர். ஆனால், யாரோ சிலர் பிழைப்புக்காகத் தொழில் செய்து கொண்டிருந்தனர். அதனால் தொழில் பல்கிப் பெருகி வளரவில்லை. தொழிற் கல்வி பெருகி வளராததால் தொழில்துறையிலும் வளர்ச்சியும் மாற்றங்களும் இல்லாமல் போயிற்று. அதுமட்டுமல்ல, தொழிலாளியும் உரிமைகளற்றவனாக, தன் தொழிலை, உழைக்கும் சக்தியை அன்றாடப் பிழைப்புக்கு விற்பவனாக இருந்தான். இது கலியுகத்தின் அவலம், பாரதி, கிருதயுகத்தில் தொழில் வளரும் என்று அறைகூவல் விடுக்கின்றான். தொழிலாளி வாழ்வான் என்று உறுதி கூறுகிறான். ஆம்! உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்று பாடியவனல்லவா? தொழிலாளியை வாழ்விக்காத யுகத்தை