பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதி ஒரு யுகசந்தி

59



பாரதி கிருதயுகத்துக் கவிஞன். அவன் ஞானம் என்பதற்கு ஒர் புது விளக்கம் தருகிறான். போருக்கே நின்றாலும் உளம் பொங்கக் கூடாது என்கிறான். உளம் பொங்காது அமைதியாக இருத்தல் ஞானம் என்கிறான். பானையில் இருக்கிற தண்ணிர் கொதிக்கலாம். பானையும் கொதிப்பதா? எனவே ஞானம் என்பது என்ன? எந்த அநீதியைச் சந்தித்துப் போராடினாலும் உள்ளத்தில் அன்பும் அருளும் தழுவிய அமைதி வேண்டும். இந்தச் சூழ்நிலையில் போரிடும் போரே நியாயமான போர். ஆத்திரத்தில்-பகையில் போரிடும் போர் நியாயமாகாது. நீதியுமாகாது. ஆதலால், ஞானம் என்பது,

"போருக்கு நின்றிடும் போதும்-உளம்
பொங்கல் இல்லாத அமைதி மெய்ஞ்ஞானம்.”

பாரதி கிருதயுகத்தில் வளர்ந்த இந்த முடிவைச் சித்திரித்து இப்பாட்டில் காட்டுகிறான். இப்பாட்டு தமிழர் உயிர் பெற்ற பாட்டில் இருக்கிறது. கிருதயுகம் வந்தால்தான் தமிழர் உயிர் பெறுவர். நூற்றாண்டு விழாக் கொண்டாடும் தமிழகம் பாரதியின் கிருதயுகத்தைக் காண்பதாக!

ஊருக் குழைத்திடல் யோகம்-நலம்
ஓங்கிடுமாறு வருந்துதல் யாகம்
போருக்கு நின்றிடும் போதும்-உளம்
பொங்கல் இல்லாத அமைதி மெய்ஞ்ஞானம்.

(திருச்சி, அகில இந்திய வானொலியில்
121.82-இல் ஆற்றிய இலக்கியப் பேருரை)

(நன்றி, திருச்சி அகில இந்திய வானொலி நிலையம்,)

எந்நிலையும் பொதுவே!

பாரதி, தமிழ்க் கவிஞர்கள் உலகத்தின் ஒரு புதிய தொடக்கமானவன்; பாரதி, பாரத நாட்டின் வரலாற்றில் ஒரு