பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


களித்துக் கொண்டிருந்த கவிஞர்களின் உலகத்தில் ஓர் அறிஞன்-விஞ்ஞானி தோன்றியது அதிசயம். வடபுலத்தில் கங்கை ஓடுகிறது! கங்கை வற்றாத ஆறு. ஏன்? பல சமயங்களில் வெள்ளப் பெருக்காக ஓடக் கூடிய ஆறு! வெள்ளம் பெருகி வரும் பொழுது நிறைய இழப்பு ஏற்படுகிறது. கங்கையின் வெள்ளம் கடலிற் சென்று கலந்து வீணாகிறது. கங்கையைக் குமரிக் கடலில் கொண்டு வந்து சேர்க்கத் தக்கவாறு கால்வாய் அமைத்தால் தண்ணிர் வசதியில்லாத பிற பகுதிகளைச் செழிக்கச் செய்யலாம். குமரிக் கடலிலிருந்து கங்கை வரை பயணம் நீர்வழி மேற்கொள்ளலாம். இஃதோர் அருமையான திட்டம். இத்திட்டத்தைப் பாரதி தந்துள்ளான். இதன் அவசியத்தைத் தேவையை நாடு உணர்ந்து வருகிறது; அறிஞர்கள் வற்புறுத்தி வருகின்றனர். ஆனால், நடுவண் அரசுக்கு இன்னும் இந்த எண்ணம் வரவில்லை. எப்பொழுது வரும் என்பதும் தெரியவில்லை. குமரி-கங்கை இணைப்பு இல்லை-காவிரிகங்கை இணைப்பு உடனடியாகச் சிந்தித்துச் செயல்பட வேண்டிய திட்டம். பாரதி நூற்றாண்டில் பாரத அரசுக்கு இந்த உணர்வை உண்டாக்க அனைவரும் முயற்சி செய்ய வேண்டும்.

அடுத்து, மண்ணின் மடியில்-சுரங்கத்தில் குவிந்திருக்கும் செல்வங்களைத் தோண்டி வெளியே கொணர்தல்: மண், வளமுள்ளது! பலவகை வளமுள்ளது. மண்ணின் செல்வத்தை அனுபவத்திற்குக் கொண்டுவர மண்ணைக் குடைந்து வேலை செய்யத் தூண்டுகிறான் பாரதி, நெய்வேலி நிலக்கரியும், சேலத்து இரும்பும், கோலார் தங்கவயல் தங்கமும் பாரதியின் சிந்தனை வழி மலர்ந்த செயல்கள்! மண்ணில் தோண்டி எடுக்கப்படும் பொருள்களை விற்கச் சந்தை வேண்டும். நாடு செழிக்க அயல் நாடுகளில் செய்யும் வர்த்தகம் வளர வேண்டும். உலகின் கண் உள்ள அனைத்து நாடுகளுக்கும் நம் நாட்டுப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இன்று உலக நாடுகளில் இந்தியப்