பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதி ஒரு யுகசந்தி

65


பொருள்கள் கிராக்கியுடன் விற்கப்படுகின்றன. இது பாரதியின் ஆசைகளுள் நிறைவேறிய ஒன்று.

அடுத்து, தென்கடலில்-தூத்துக்குடியில் முத்துக் குளிக்க வேண்டும் என்பது. தென்கடல், வணிகர்கள் வந்து மொய்க்கும் துறைமுகமாகச் சிறந்து விளங்க வேண்டும். இது பாரதியின் எண்ணம். இன்று, தூத்துக்குடியில் புதிய துறைமுகம் அமைக்கப்பெற்று, ஏற்றுமதியும் இறக்குமதியும் செய்யப்பெற்று வருகின்றன. பாரதியின் நினைவாகிய இது நிலையான செயலாக உருப்பெற்றுள்ளதில் தலையாயது.

அடுத்து, பாரதியின் தொழில் திட்டங்கள்! மேலும் வளர்ந்து ஆலைகள் அமைக்கவும், தொழிற்சாலைகள் அமைக்கவும் தூண்டுகின்றான். பாரத நாடு விடுதலைப் பெற்ற பிறகு பல தொழிற்சாலைகள் நிறுவப்பெற்றுள்ளன. தொழிற்புரட்சி நடைபெற்று வருகிறது. இது போதுமா? நாடு வளர வள்ர, வல்லரசுகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள ஆயுதங்கள் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகின்றான். பெங்களுர் விமானத் தொழிற்சாலையும், திருச்சி கனரகத் தொழிற்சாலையும், ஆவடி டாங்கு தொழிற்சாலையும் பாரதியின் நினைவுச் சின்னங்களாக விளங்குகின்றன. பாகிஸ்தான் சண்டையில் அமெரிக்க வல்லரசின் டாங்கு களையெல்லாம் சந்தித்து நின்று பெற்ற வெற்றி பாரதிக்குரிய காணிக்கையாகும்.

ஒரு நாடு வலிமையும் பொருளும் பெற்று, வளர்ந்து வாழ, அந்நாட்டு மக்கள் ஆவேச உணர்ச்சியுடன் உழைக்க வேண்டும். அப்பொழுதுதான் வற்றாத செல்வம் பெருகும். ஓய்வு என்பது வேலை மாற்றமே தவிர, உறங்குதல், ஊர் கற்றுதல், வம்பளத்தல் அல்ல, ஓயாது உழைக்கும் உணர்ச்சி நம் நாட்டு மக்களிடத்தில் சுதந்திரம் பெற்ற சில ஆண்டுகள் வரையிருந்தது; நாடும் வளர்ந்தது. இப்பொழுது ஓயாது உழைக்கும் ஆவேசம் இல்லை; எங்கணும் இல்லை. இன்று