பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதி ஒரு யுகசந்தி

67



ஆற்றங்கரை நாகரிகங்களும் கலக்க வேண்டும். இவ்விரு நாகரிக மக்களும் ஒன்றாக, ஒருமையுடையராகிக் கலந்து வாழவேண்டும். இதுவே பாரதியின் இலட்சியம், பாரதியின் சொற்கள் வெற்றி பெற்று இவ்விரு நகரங்களையும் தொலைபேசி வழி இணைத்துவிட்டது. பாரதி சொல்லும் பொருள் வழி, உணர்வு வழி இணைப்பு வரவேண்டும்? அவ்வகையில் உருவாகும் சாதனை, பாரதிக்கு நிலையான நினைவாகும்.

வேறுபட்ட சூழ்நிலைகளைக் கடந்து ஒருமையுணர்வு, உண்டாக்க இயற்கையான காதலும், கனிவு தரும் இசையும் துணை செய்யும்! பாரத மக்கள் தம் இனத்திலேயே காதலித்துத் திருமணம் செய்யாமல் அயல் மாநிலப் பெண்களைக் காதலிக்கவும் வழிகாட்டுகிறார். அவ்வழி உறவுகள் வளரும்! ஒருமைப்பாடு வளரும்! பாரத சமுதாயமும் செழித்து வளர்ந்து வாழும்!

பாரதியின் தொழிற் புரட்சி

பாரத நாடு வேளாண்மைத் தொழிலிற் சிறந்த நாடு. ஒரு நாடு முன்னேற, பொருள் வளத்தில் செழிக்க தொழில் வளர்ச்சியும் தேவை. தொழிற் புரட்சி நடந்தால்தான் சமுதாயம் செழித்து வளரும். என்பது மார்க்சியக் கொள்கை. இந்தத் தத்துவத்தை பாரதி, நன்கு உணர்ந்திருந்தான். உழவர்களும் தொழிலாளர்களும் இணைந்தால்தான் சமுதாய மாற்றங்கள் நிகழும்; செழிப்புறும் என்ற சமுதாய அறிவியல் கொள்கைக்கு, பாரத நாட்டில் பாரதிதான் முதன் முதலில் முழக்கம் செய்தான்.

"உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்” என்று பாடினான்.

தொழிற் புரட்சியில் வேலை வாய்ப்பு பெருகும்; வளம் கொழிக்கும்; அறிவியல் பெருகி வளரும். இந்தியா இங்கிலாந்