பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதி ஒரு யுகசந்தி

81


கையைப் பொறுத்தது. மனம் பற்றியதை புத்தி ஆராயும்; கழிப்பன கழிக்கும். ஏற்பன ஏற்றுச் சித்தத்திற்குத் தரும். சித்தம் மீண்டும் காரண காரியங்களுடன் ஆராய்ந்து தெளிந்து துணிந்து ஏற்கக்கூடியதை நிச்சயித்து ஏற்றுக் கொண்டு செயற்களனுக்கு, தான் ஏற்றுக் கொண்டுள்ள முடிவுகளை அனுப்பும். இது மனிதனின் அகநிலை வாழ்க்கை வளர்ச்சி முறை.

"மனம் போன போக்கில் போகாதே!” என்ற பழமொழி ஏன் பிறந்தது? மனம் எளிதில் பற்றும். ஆனால், ஆராய்ந்தறியும் தகுதியும் செயற்பாடும் அதற்கு இல்லை. ஆராயும் தகுதி புத்திக்கே உண்டு. அதனால்தான் ஏதாவது தவறுகள் நிகழின் "புத்தி இருக்கிறதா?” என்று கேட்கின்றனர். புத்தி இருந்தால் மட்டும் போதாது. சிந்திக்கும் இயல்பும் வேண்டும். சிந்தனையில் தோன்றும் முடிவுகளே நல்லவையாக, ஆக்க வழியிலானவையாக, இன்பந்தருவனவாக அமையும். துணிவும் சிந்தனையின் வரம்பில்தான் தோன்றுகிறது. முறையாகச் சிந்திப்பவர்களிடம் "இதுவா? அதுவா?” என்ற ஊசலாட்டம் இருக்காது. தெளிவும் துணிவும் இருக்கும். அங்ஙனம் சிந்தனையில் பிறந்த முடிவுகளால் இந்த உலகம் இயங்குகிறது.

இந்த உலகமே சித்தமயம் என்கிறான் பாரதி. சிந்தனையில் உறுதி தேவை. தன்னயப்புடையவர்களிடம் முடிவுகள் அடிக்கடி மாறும். மனம், புத்தி இவைகளுடன் உடன்பட்டும் வேறுபட்டும் சிந்தித்தல் அவசியம். பலர், மனம் புத்தி இவைகள் வழியிலேயே தமது சிந்தனையையும் செலுத்துவர். இத்தகையோரிடத்தில் பொறிகளுக்கு மனம் "ஆமாம் சாமி!” யாகும். புத்திக்குச் சித்தமும் ஆமாம் சாமி! போடும். எல்லாம் ஒரே மாதிரியான ஆமாம் சாமிகளானால் ஆய்வு நிகழாது, தெளிவும் இருக்காது துணிவும் இருக்காது; உறுதியும் இருக்காது. தத்தம் நிலையில் முடிவு எடுக்காது