பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தன்னை அறிதல்

திருநாவுக்கரசர் சிவ நெறியில் தோய்ந்து விளங்கிய புலமை மிக்கவர். சைவத்தின் கொள்கையில் சிறந்தது தன்னை அறிதல்; அதன்பின்தான் தனக்குவமையில்லாத தலைவனை அறிதல்; உணர்தல், “தம்மை யுணர்ந்து தம்மையுடைய தலைவனை உணர்தல்” என்பது சைவ மரபு.

அறிவியல் முறையில் ஆய்வு செய்தாலும் நம்மை, நமது நிலையை, நமது தேவையை உணர்தலே முதற் பணி; நமது நிலையை நமது தேவையை உணராமல் எங்கே போவது? எதைத் தேடுவது? அதனால் சைவ மரபு, தன்னை யறிதலையே சமயக் கடமைகளில் முதன்மைப்படுத்தியது. திருநாவுக்கரசரும்,

தன்னில் தன்னை அறியும் தலைமகன்
தன்னில் தன்னை அறியில் தலைப்படும்
தன்னில் தன்னை அறிவிலன் ஆயிடில்
தன்னில் தன்னையும் சார்தற்கு அரியனே,

(5-97.29)

என்றருளிச் செய்தார்.

உள்ளமே கோயில்

பப்போதிப் பவணனாய்ப் பறித்ததொரு தலையோடே திரிதர் வேனை
ஒப்போட ஓதுவித்தென் உள்ளத்தின் உள்ளிருந்தங்கு உறுதிகாட்டி
அப்போதைக் கப்போதும் அடியவர்கட்கு ஆரமுதாம் ஆரூராரை
எப்போதும் நினையாதே இருட்டறையின் மலடுகறந்து எய்த்தவாறே.

(4–5.9)

இறைவன் உயிர்களுக்கு உயிராக இருந்தருள் செய்யும் பெற்றிமையை இந்தப் பாடல் உணர்த்துகிறது. திருநாவுக்