பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/121

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அப்பர்
117
 


எவருடைய உள்ளத்தில் சிவன் எம்பிரான் எழுந்தருள்கின்றான்? உணவின்றி வருந்தும் அனைவருக்கும் உணவளிப்போர், அறிவு நலம் மிகுதியும் பெற்றோர் ஆகியோர் உள்ளத்தில் அவன் எழுந்தருள்கின்றான். அறிவின் அடையாளம் துன்பந்தவிர்த்தல். துன்பந் தவிர்த்தலுக்கு, துணையாயமையும் சிவனை, தேறித் தெளிதல்; உணர்தல்; வணங்குதல் - இந்த அறிவே அறிவு.

அன்புடையராதல், மெய்யன்புடையராதல் வேண்டும். பயன் கருதாது உள்ளவாறு காட்டும் அன்பு மெய்யன்பு. இந்த மெய்யன்பு பெறுதல் அவசியம். பொய்ம்மையும் தன்னலமும் எளிதில் நீங்கா. உடலை வருத்தியேனும் மெய்யன்பைப் பெறுதல் வேண்டும். அப்பரடிகள் எல்லை கடந்தவர். ஆதலால்,

எவரேனும் தாமாக! விலாடத் திட்ட
திருநீறும் சாதனமும் கண்டால் உள்கி
உவராதே அவரவரைக் கண்ட போது
உகந்தடிமைத் திறம் நினைந்து,

என்பார்.

திருநீறணிந்தவர் எவரேயானால் என்ன? அவரிடம் அன்பு காட்டுக. “மனிதரில் எவரேனும்” என்ற பிறகு, கடவுளில் ஏது வேறுபாடு! அப்பரடிகள் “இவர் தேவர்; அவர் தேவர்” என்று இரண்டாகப் பலவாகப் பேசிடும் மதச் சண்டைகளை மறுக்கிறார். ஒன்றே பரம்பொருள்! இரண்டு என்பது ஒன்றில்லை! ஒன்று என்றால் ஒருமை நிலை. இரண்டு என்றால் விவகாரம்.

ஆதலால், என்றும் எங்கும் உளனாகிய ஈசனை நினைந்து திருநீறணிந்து நிற்பவர் சிவனடியார். உயிர்க்கு உயிராக விளங்கும் கடவுளாகிய நடுதறியில், ஆன்மா கட்டப்பெற்றுள்ளது. பலருக்கு இன்று நெஞ்சமே இல்லை.