பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/127

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அப்பர்
123
 

அதிகமாக இருக்காது. ஆனால், மழை ஓய்ந்தபின் மரத்தடியில் நின்றால் மரக் கிளைகளிலிருந்து விழும் சொட்டுக்கள் அதிகக் குளிரையும் நடுக்கத்தையும் தரும்.

அதுபோல மூலமலமாகிய ஆணவத்தைக் காட்டிலும் வாசனாமலம் வேகமாகத் தாக்க வல்லது. அதனால் ஆயுட்காலம் முழுவதும், ஜீவன் முத்தி நிலையிலும்கூட, பக்தி நலஞ்செறிந்த உறுதிப்பாடுடைய வாழ்க்கையைப் பேண வேண்டும்.

இந்த உலகத்தை நடத்துவது, இயக்குவது நம்பிக்கையும் பக்தியுமேயாகும். கடவுள், மனம், வாக்குகளைக் கடந்த பொருள். கடவுள் காணப்படாத பொருள் என்று வாளா இருத்தல் தற்கொலைக்குச் சமம்.

நம்பிக்கையுடன் கடவுளைத் தேடவேண்டும்; பக்தி செய்யவேண்டும். இதன்மூலம் கடவுளைக் கண்டும் விடலாம். எவ்வளவுதான் பக்தி உயர்ந்ததாயினும் பக்தி இலட்சியமல்ல. பக்தி ஒரு சாதனமே! இந்த பக்தியே இலட்சியமாக விளங்கும் இரங்கத்தக்க நிலை தோன்றியுள்ளது.

அப்பரடிகளின் அருள்நோக்கால் இந் நிலை மாற வேண்டும். அப்பரடிகள் ஞானத் தலைவர், பக்தி கொண்டு ஒழுகியவர்; திருத்தொண்டே சார்பெனக் கருதி ஒழுகியவர்; அவர்தம் வாழ்க்கையிலும் வாக்கிலும் திருத்தொண்டு மேவி இருந்தது. உடலுறுப்புக்கள் அனைத்தையும் திருத்தொண்டில் ஈடுபடுத்தும் வகையில் திரு அங்கமாலைப் பதிகம் அருளிச் செய்தார்.

திருநாவுக்கரசர், திருக்கோயில் தொண்டுகளைச் செய்யும்படித் தூண்டுகிறார். பழங்காலத்தில் திருக்கோயிலில் தொண்டுமுறையில் நிகழ்ந்த பணிகள் அனைத்தும் இன்று தொழில்களாக மாறிவிட்டன. அறநிலையத்துறை செய்த மகத்தான காரியம் திருக்கோயில் பணியாளர்களைத் தொழிலாளர்களாக்கித் தொழிற்சங்கம் அமைத்து வேலை நிறுத்தம்