பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அப்பர்

125


நாடு வளரும்; சிவநெறி வளரும்; செந்தமிழ் வளரும்; அல்லன அகலும்; அறம் வளரும்; அன்பும் அமைதியும் இன்பமும் வளரும்; எங்கும் அன்பே அமையும்; பெரு வாழ்வு தோன்றும்.

சமுதாயக் கேடுகளை எதிர்த்தவர்

அப்பரடிகள் இறைநெறியில் எவ்வளவு காலூன்றி நின்றாரோ அவ்வளவுக்குச் சமுதாயத் துறையிலும் காலூன்றி நின்றவர். சமுதாயக் கேடுகளைக் களைவதில் முனைப்புடன் ஈடுபட்டவர்.

அப்பரடிகளுடன் இணைந்த கருவி உழவாரம். திருக்கோயில் விமானங்கள், மதில்கள், திருச்சுற்றுகள் முதலியவற்றில் முளைத்த செடி கொடிகளை அப்புறப்படுத்துதலே உழவாரப் பணி. இந்த உழவாரத் திருத்தொண்டை ‘கைத் திருத்தொண்டு’ என்று சிறப்பித்துக் கூறுவார் சேக்கிழார். ஏன்? சிவபெருமானே - திவீழிமிழலை இறைவனே அப்பரடிகளின் கைத்திருத் தொண்டில் திருவுள்ளம் கொண்டு வாசி இல்லாத காசு அருளிய பான்மை உள்ளவாறு உணரத்தக்கது.

திருத்தொண்டு செய்யும் பாங்கு வளர்தல் வேண்டும். திருமறைக்காட்டில் மூடப்பெற்றிருந்த திருக்கோயில் கதவைச் செந்தமிழ்ப் பதிகம் பாடித் திறக்கச் செய்து எல்லோரும் வழிபாடு செய்து கொள்ளும் வாய்ப்பினை வழங்கினார்.

சமுதாயத்தில் நிலவிய சாதிகளை வன்மையாக மறுத்தவர் திருநாவுக்கரசர்.

சாத்திரம் பல பேசும் சழக்கர்காள்
கோத்திர மும்குல மும் கொண் டென்செய்வீர்
பாத்தி ரம் சிவ மென்று பணிதிரேல்
மாத்தி ரைக்குள் அருளுமாற் பேறரே!

(5.60.3)

என்பார். படித்தவர்கள் செய்வது சாத்திரம். படித்தவர்கள் உண்மையான சமுதாய நலத்திற்கு எதிரிடையாகக் கூடச் சாத்திரம் செய்வதுண்டு. இதைப் பாரதி “பொய்ச் சாத்திரம்”