பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/137

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அப்பர்
133
 

நீள்வான முகடதனைத் தாங்கி நின்ற
நெடுந்தூணைப் பாதாளக் கருவை ஆரூர்
ஆள்வானைக் கடுகச்சென் றடைவேன் நும்மால்
ஆட்டுணே னோட்டந்தீங் கலையேன் மின்னே!

(6.27.9)

இந்தப் பிறவித் துன்பத்தை மாற்ற வழிதான் என்ன? வேதம் ஓதுதலால் அடைய இயலுமா? வேள்விகள் செய்யலாமா? நீதி நூல்களைப் படித்தால் சாலுமா? இவையெல்லாம் பயன் தாரா! ஈசனை உணர்தலே வழி; வேறு வழியே இல்லை!

அதனால்தான் “நிலையில்லாத நீ நிலைபெறுமாறு வேண்டுதியேல் ஈசனை நினைந்துய்ம்மின்”; தில்லையுள் கூத்தனுக்கு அன்பு பூண்டால், ஆட்பட்டால் அல்லல் என் செய்யும்? வல் வினைகள்தான் என் செய்யும்? ஒன்றும் செய்யா? நமன் தமரும், “சிவன் தமர்” என்று ஓடிவிடும்!” என்று கூறுகிறார்.

பழிபாவங்களுக்குக் கழுவாய் எது?

பாவம், பழி நீங்குவதற்கு என்ன வழி? என்று நினைந்து, அப்பரடிகள் பாவநாசத் திருப்பதிகம் அருளிச் செய்துள்ளார். உலகந் தோன்றிய நாள் தொட்டு மனித வாழ்க்கையில் பாவங்கள் நிகழ்ந்து வந்துள்ளன. அதே போழ்து பாவ நீக்கத்திற்குரிய முயற்சிகளும் மேற்கொள்ளப் பட்டு வந்துள்ளன.

கிறித்தவ மத வரலாற்றில் “பாவ மன்னிப்புச் சீட்டு முறை” எழுப்பிய புயல், - புயலின் விளைவு நாடறிந்தோருக்குத் தெரியும்.

மனு நீதிச் சோழன் வரலாற்றில் பாவமன்னிப்புச் சடங்குகளை அமைச்சர்கள் விதந்து கூறுவதைச் சேக்கிழார்