பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/145

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
26

அப்பர் விருந்து


1. ஏழில் இருபது

ஏழும் இருபதும்

நாம் இருபதாம் நூற்றாண்டில் வாழ்கிறோம். இன்றைய இளைஞர்கள் இருபதாம் நூற்றாண்டு, புதுமை நிறைந்த நூற்றாண்டு, அறிவு பெருகிய நூற்றாண்டு, ஆற்றல் பெருகிய நூற்றாண்டு, மறுமலர்ச்சியும், சீர்திருத்தமும் பொங்கி வழியும் நூற்றாண்டு என்று நினைக்கிறார்கள். இருபதாம் நூற்றாண்டின் தலைமுறை என்று சொல்லிக் கொள்வதிலேயே நம்மில் சிலர் பெருமைப் படுகிறார்கள்; நாங்கள் “பத்தாம் பசலிகள்” அல்லர், புத்தம் புதிய பிறவிகள் என்று சொல்லிக் கொள்வதிலேயே பலர் பெருமைப்படுகிறார்கள்.

ஆயினும், நாம் வாழுகிற இந்த நூற்றாண்டு இருபதாம் நூற்றாண்டு. தலைப்பில் கொடுக்கப்பட்டுள்ள இருபது என்கிற சொல் இருபதாம் நூற்றாண்டைக் குறிக்கும். ஏழு என்கின்ற சொல் ஏழாம் நூற்றாண்டைக் குறிக்கும். இருபதாம் நூற்றாண்டில் எவற்றையெல்லாம் நாம் புதுமைகள் என்று