பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அப்பர் விருந்து

149


இருக்கிறார்கள் என்று தெரிகிறது. எனவேதான் “இருந்து சொல்லுவன் ஏழைகாள்! கேண்மின்கள்!” என்றும் சொல்லியிருக்கிறார். ஆம், “நான் உட்கார்ந்து சொல்லுகிறேன். கேளுங்கள்!” என்று சொல்லியிருக்கிறார். இது எதைக் காட்டுகிறது? அவர், தமிழகத்தில் தமது கருத்துக்களை வெளியிடத் தொடங்கியபொழுது இந்த நாட்டில் இருந்த சிக்கலான நிலையைத் தானே; அப்பரடிகள் பலப்பல இடங்களில் பல்வேறு சூழல்களில் பட்டினியாகக் கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுச் சிவபெருமானே அவருக்குச் சோறுகொணர்ந்து கொடுத்திருக்கிறார்.

நமது நாயன்மார்கள் இப்படி இறைவனே சோறு கொணர்ந்து கொடுக்கும் அளவிற்கு அருள் வல்லார்களாக இருந்தார்கள் என்பது நமக்குப் பெருமையாகத் தெரிகிறது. அதே நேரத்தில் அவருக்குத் தமிழகத்தில் இருந்த வரவேற்பையும் நாம் உணரமுடிகிறது. அருளியல் ஞானியான அப்பரடிகளை வரவேற்றுச் சோறு கொடுக்கத் தமிழகத்தில் ஆள் இல்லாமல் இருந்தமையாலேயே இறைவனே பொதி சோறு கொணர்ந்து கொடுத்திருக்கிறார்! இது தமிழகத்தின் அன்றையச் சிக்கலைத்தானே காட்டுகிறது!

“திருத்தொண்டின் நெறி வாழ...”

இவ்வாறு சிக்கல் சூழ்ந்து நாட்டு மக்கள் இருளிலே மயங்கிக் கிடந்த காலத்தில்தான் அப்பரடிகள் தொண்டை நாட்டிலே - திருவாமூரிலே அவதரித்து அருமையான பாசுரங்கள் ஆயிமாயிரம் பாடினார். மக்களின் உள்ளங்களைத் தொடுகின்ற அளவிற்கு அவர் இசையோடு பாடினார்; நாடு முழுதும் சென்று நயத்தகு தொண்டு செய்தார். அப்பரடிகளின் வரலாறே தொண்டின் வரலாறு தான். “திருநாவுக்கரசு வளர் திருத்தொண்டின் நெறி வாழ” என்று சேக்கிழார் பெருமான் பாராட்டுகின்றார். இவ்வளவு சிறந்த அப்பரடிகள் ஏழாம் நூற்றாண்டிலேயே இருபதாம்