பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/186

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
182
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
 

முடிக்கின்றானோ, அப்படியே தொண்டையும், பக்தியையும் வாழ்க்கைக் குறிக்கோள்களாகக் கொண்டு வாழுகிற மனிதன், தன் வாழ்க்கையை இன்பகரமாக நடத்த முடியும். அவன் வாழ்க்கை இன்ப வாழ்க்கையாகத் திகழும். இந்த உண்மையை மிக நன்றாக உணர்ந்தே நமது அப்பரடிகள் தொண்டின் வடிவமாகத் தொண்டின் செல்வராகத் திகழ்ந்தார். “என் கடன் பணி செய்து கிடப்பதே” என்றார்.

இன்று பணி செய்வதிலும்கூடப் பலர், பலாபலன்களைக் கணக்கிட்டே செய்கின்றனர். “பணி செய்ய வேண்டும், பலனை எதிர்பார்க்கக் கூடாது.” என்றார் அப்பரடிகள். இத்தகு உயர்ந்த கொள்கைகள் பலவற்றை அப்பரடிகள் ஏழாம் நூற்றாண்டிலேயே வலியுறுத்திச் சென்றிருக்கிறார். நாம் வாழும் இந்த இருபதாம் நூற்றாண்டில் நாம் எவ்வெவற்றையெல்லாம் புதிய சிந்தனைகள் என்று எண்ணுகிறோமோ அவற்றையெல்லாம் ஏழாம் நூற்றாண்டில் இந்த நாட்டில் தோன்றிய அப்பரடிகள் மிக மிக அழகாக, ஆணித்தரமாகச் சொல்லிச் சென்றிருக்கிறார். ஏழாம் நூற்றாண்டில் அப்பரடிகள் காண விரும்பிய சாதிகுல பேதமற்ற, பொருளாதார ஏற்றத்தாழ்வற்ற, எல்லாரும் எல்லாப் பெருஞ்செல்வமும் பெற்று வாழ்கிற, அன்பாலே மக்கள் குலம் இணைந்து வாழ்கிற, தொண்டின் வழிப்பட்ட புதிய சமுதாயம் காணும் முயற்சியில் ஈடுபடு வோமாக!

2. அன்பில்லையேல்...!

இன்று நம் நாட்டில் கடவுள் நம்பிக்கையுண்டு; வழிபாட்டு வெளிப்பாடும் உண்டு; திருக்கோயில்கள் சூழ்தலும் உண்டு; திருநீறு அணிதலும் உண்டு; ஆறுகாலப் பூசைகளுமுண்டு; விழாக்களும் உண்டு; வேடிக்கைகளும்