பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அப்பர் விருந்து

211


12. அஞ்சுவது யாதொன்றும் இல்லை!

மானிடராய்ப் பிறந்து வாழ்தல் அரிய பேறு; இனிய பேறு; எளிமையிற் கிடைக்கக் கூடிய ஒன்றன்று. அதனாலன்றோ, 'அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது’ என்று ஆன்றோர் கூறினர். இந்த மானுட வாழ்க்கையின் பயனாவது, உயிர், அறிவு நலம் பெறுதல்; ஆன்ற அனுபவம் பெறுதல்; மூத்து முதிர்தல்; துன்பத் தொடக்கிலிருந்து விலகி இன்பச் சார்பாதல் ஆகியனவாகும். எங்ஙனம் உயிர் அறிவுபெறும்? குறைகள் நீங்கி நிறைவு பெறும்?

அறிவு எல்லையற்றது. அறிவுக்கோர் எல்லை அரனே யாம்; அதனாலன்றோ, வள்ளுவம் 'வாலறிவன்’ என்று இறைவனை வாழ்த்துகிறது. கடவுள் நம்பிக்கையுடையவர்கள், இயல்பில் முட்டாள்களாக இருக்க முடியாது. காலத்தின் கொடுமை, இடையில் கடவுட் சார்புடைய மதத் தலைவர்கள், புரோகிதர்கள் தங்கள் பணியைச் செய்யத் தவறியதால் அறிவு விளக்கம் இல்லாதவர்களும் கூட இன்று கடவுள் நம்பிக்கையுடையவர்களாக இருக்கிறார்கள். ஆனால் அது நம்பிக்கையே தவிர, வாழ்க்கையன்று. கடவுள் கொள்கையை நம்பி ஏற்றுக் கொள்ளுதல் என்பது ஆழமும் அகலமும் நிறைந்த அறிவின் முதிர்ச்சியிலே ஏற்படக் கூடியதாகும். உலகியலின் அமைதியினை ஆராய்ந்து அந்த ஆய்வின் முடிவாகவே, கடவுளைக் கண்டனர் நம்முடைய முன்னோர். கடவுள் நம்பிக்கையுடையோராக வாழ்தற்குப் பேரறிவு தேவை; விரிவான வாழ்க்கை அனுபவங்கள் தேவை. ஆதலால், அறிவின் உயர்மட்ட எல்லையாக விளங்கும் அரனை, எண்ணி வழிபடுதலின் மூலம், வாழ்க்கையில் உறவுபடுத்திக் கொள்ளுதலே அறிவு பெறுவதற்குரிய வழி.

இந்த முயற்சியிலே உலகியல் நுண்கலைகள் அனைத்தையும் ஆரத் துய்த்தறியும் வாய்ப்புகள் ஏற்படும். உலகியலைத் துறைதோறும் ஆராய்ந்து அவற்றின் இயல்புகளைக்