பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/249

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அப்பர் விருந்து
245
 

என் தாய் தனது வயிற்றில் அற்புதமான மூளையும் இதயமும் அழகும் ஆற்றலும் வாய்ந்த ஓர் உருவமாக என்னை உருவாக்கித் தந்த அற்புதக் கொடைக்கு ஈடு ஏது? ஆதலால் உயிர் சந்தித்த-பெற்ற இரண்டாவது துணை தாய்! உயிர் உடம்பெடுத்துப் பிறந்தாயிற்று! குழந்தை என்ற பெயரில் சிலகாலம் படுத்து, தவழ்ந்து, உட்கார்ந்து, தள்ளாடி நடந்து, விழுந்து எழுந்து நடந்து பையனாயிற்று! அப்பனும் அம்மையும் எப்போதும் உடன் இருப்பதில்லை; இருக்கவும் முடிவதில்லை.

இப்போது அவர்கள் அடுத்த உயிரின் பயணத்தை ஆரம்பித்து வைக்கும் பணியில் ஈடுபட்டு விட்டனர்; அப்படியில்லாது போனாலும் அவர்கள் மூத்த தலைமுறையினர். இளமை நலம் சார்ந்த பையனுடைய உணர்வுகளை அவர்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை. சிலர் புரிந்து கொள்ளவும் முயற்சி செய்வதில்லை. “பையன் நேற்று தோன்றினான், நாம் மூத்தோர்” என்ற எண்ணம் அவர்களுக்கு! இது ஒருவகை நோய்! இதனை தலைமுறை இடைவெளி என்கின்றனர்.

இந்தச் சூழ்நிலையில் தனக்குச் சில ஆண்டுக்கு முன் பயணத்தைத் தொடங்கிய அண்ணன் துணையாக அமைகின்றான். அவன் ஆவல்களை, ஆர்வங்களைப் புரிந்து கொள்கிறான்; உடனுக்குடன் அடையத் துணையாய் இருந்து உதவி செய்கிறான். உணர்வில் ஒன்றாகின்றான், உருவாகி வாழ்கின்றான்; வாழ்விக்கின்றான். ஆயினும் என்ன செய்ய? வாழ்க்கையென்பது நாம் பெற்றதை மற்றவர்களும் பெறத் துணை செய்வதுதானே! அதனால் ஒவ்வொருவருடைய வாழ்வும் பிறிதோர் உயிரின் பயணத்திற்குத் துணையாய் அமைதல் இயற்கை தவிர்க்க முடியாத கடமை! அத்தகைய அமைவில் பிறிதோர் உயிர் பயணத்திற்குத் துணை செய்யத் தக்க உற்பத்திக் கருவிகளுடன் ஒருத்தி பிறந்தாள்; வளர்ந்தாள். குறிப்பிட்ட இளமைப் பருவம் மீதுாரத் தொடங்கிய நிலையில்