பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அப்பர் விருந்து

249


கொள்கின்றான்! வாழ்க்கை நிறைநலம் எய்திய நிலை இதுவே!

அப்பன்நீ அம்மைநீ ஐயனும்நீ
அன்புடைய மாமனும் மாமியும்நீ
ஒப்புடைய மாதரும் ஒண்பொரு ளும்நீ
ஒருகுலம் சுற்றம் ஒருரும்நீ
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய்நீ
துணையாயென் நெஞ்சந் துறப்பிப்பாய்நீ
இப்பொன்நீ இம்மணிநீ இம்முத்துநீ
இறைவன்நீ ஏறுரர்ந்த செல்வன்நீயே”

- திருநாவுக்கரசு சுவாமிகள்

24. அருள் நெறி வாழ்க்கை

நமது தாய்மொழியில் நிறைய இலக்கியங்கள் உண்டு. புறத்திணை இலக்கியங்களும் உண்டு; அகத்திணை இலக்கியங்களும் உண்டு; இந்த இரண்டையும் கடந்து வளர்ந்த அருள்திணை இலக்கியங்களாகிய பக்தி இலக்கியங்களும் உண்டு. கடவுள் நம்பிக்கை உடையவராக இருப்பதும் அருள்நெறி வாழ்க்கை வாழ்வதும் எளியதன்று. விஞ்ஞானிக்குத் தேவையான ஆற்றல்கள் அனைத்தும் அவ்வாற்றல்களோடு சீலமாகிய தவமும் அருள் வாழ்க்கைக்குத் தேவை. விஞ்ஞானத்தின் படைப்புக்கள் உலகியலை வளப்படுத்த மாறாது பயன்படுவன போலவே, மனித இயலில் உள்ளங்களை வளப்படுத்த மாறாது பயன்பட வல்லது மெய்ஞானம். அதாவது, பத்திமை வாழ்வு! ஆயினும், இன்று பத்திமை வாழ்வு அங்ஙனம் பயன்படாமையின் காரணமாக அதன் மீது ஐயங்கள் எழுந்துள்ளன. ஏன்? எதிர்க்களம் ஒன்றே தோன்றி வளர்ந்து வருகிறது.

அருளியல் வாழ்க்கை ஆற்றல் நிறைந்த வாழ்க்கை; அறிவறிந்த ஆள்வினையுடைய வாழ்க்கை அன்பில் தழைத்த