பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/262

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
258
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
 

பாத்தி ரம்சிவ மென்று பணிதிரேல்
மாத்தி ரைக்குள் அருளுமாற் பேறரே

என்று சாடுகின்றார். மேலும்,

சங்கநிதி பதுமநிதி இரண்டும் தந்து
தரணியொடு வானாளத் தகுவ ரேனும்
மங்குவார் அவர்செல்வம் மதிப்போ மல்லோம்
மாதேவர்க் கேகாந்த ரல்ல ராகில்
அங்கமெலாம் குறைந்தழுகு தொழுநோ யராய்
ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனும்
கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்ப ராகில்
அவர்கண்டீர் நாம்வணங்கும் கடவு ளாரே!

என்றும் அப்பரடிகள் பாடுகின்றார்.

இதையே பாரதியும்,

சூத்திர னுக்கொரு நீதி-தண்டச்
சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி
சாத்திரம் சொல்லிடு மாயின்-அது
சாத்திரம் அன்று சதியென்று கண்டோம்

என்று பாடுகின்றார்.

இந்தப் பாடல்களின் கோட்பாடுகளை இப்போதும் ஏற்காத இதயம் படைத்த, மருட்டுகின்ற மதத் தலைவர்கள் நமது நாட்டில் உள்ளனர். ஐயகோ! இன்றைய தமிழகம் யாரோ ஒரு பாவி நுழைத்த சாதிப் புன்மைகளால் சீரழிந்து வருகிறது. இந்தப் பொல்லாச் சாதித் தீமையை நீக்கினால் ஒழியத் தமிழகம் மீளாது. தமிழினமே ஒருமைப்பாடு குலைந்து சிதறுண்டு போகும். தமிழினத்தில் நுழைத்துள்ள சாதி வேற்றுமைகளை முற்றாக அகற்றத் தக்க வகையில் இட ஒதுக்கீட்டுக் கொள்கை, நடைமுறை விதிகளை மறு ஆய்வு செய்ய வேண்டும். திருக்கோயில் வழிபாட்டு முறையிலும்