பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அப்பர் விருந்து

259


கருவறையில் உள்ள பெருமானைப் பத்தராவார் அனைவரும் பூவும் புனலும் சொரிந்து வழிபடும் வாய்ப்பு, வழங்கப் பெறுதல் வேண்டும். இந்த உரிமை திருமுறைக் காலத்திலும் அதற்கு முன்பும் இருந்தது.

அப்பரடிகள்,

மாதர்ப் பிறைக்கண்ணி யானை
மலையான் மகளொடும் பாடிப்
போதொடு நீர்சுமந் தேத்திப்
புகுவா ரவர்பின் புகுவேன்
யாதும் சுவடு படாமல்
ஐயா றடைகின்ற போது
காதல் மடப்பிடி யோடுங்
களிறு வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங்
கண்டறி யாதன கண்டேன்.

(4ஆம் திருமுறை)

என்று ஒதும் பாடலின் மூலம் பத்தராவார் ஒவ்வொருவரும் கருவறையில் எழுந்தருளியுள்ள பெருமானுக்குப் புனலும் பூவும் சொரிந்து வழிப்பட்டுள்ளனர் என்பதை அறிகின்றோம். இன்றும் வடபுலத்தில் இந்த மரபு இருக்கிறது. ஆனால், தமிழகத்தில் இந்த உரிமை இல்லை. அர்ச்சகர் சாதியை மாற்றும் முயற்சியை விட இந்த முயற்சி பயனளிக்கத்தக்கது. பழைய மரபைப் புதுப்பிப்பதுமாகும். மூலவர்-இறைவன் சந்நிதியில் (திருவாபரணங்கள் இல்லாத நிலையில்) நடை முறைப்படுத்தலாம்.

அறக்கட்டளை முறை

இன்று நம்மை வருத்தும் தீமைகளில் இரண்டாவது வறுமை, ஏழ்மையாகும். இந்த வறுமையிலிருந்து மக்களை மீட்கத் தவறிவிட்டால் இந்தத் தலைமுறையிலேயே தமிழர்கள் வலிமை இழப்பர்; தமிழகம் தாழும். பொருளியல்