பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/272

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.28
அப்பரடிகளின் போராட்டங்கள்

தமிழகத்தில் ஏழாம் நூற்றாண்டில் நடமாடிய அருள் நலஞ்சார்ந்த புரட்சிக்கனல் அப்பரடிகள். அப்பரடிகள் ஒரு போராளியார்; தமிழாளியர். சமுதாய நலம் நாடிய அருள்நெறித் தலைவர். மூடத்தனங்களைச் சாடிய சமயத் தலைவர். முடியாட்சியை எதிர்த்துப் போராடி, குடிமக்கள் உரிமையைக் காத்த காவலர். பூரண சுதந்திரம் நாடிய நற்றவத்தர். தமிழகம் முழுதும் நடந்து, கிளர்ச்சி செய்தவர்; உழைப்பும் தொண்டுமே உயிரெனக்கொண்டு உலாவிய உத்தமர். நடையறாப் பெருந் துறவியாக நடமாடிப் பணி செய்தவர் நாவுக்கரசர்.

ஒரு மனிதன் வாழ்க்கையில் வீர மிக்குடையவனாக வாழவேண்டுமானால், முதலில், அவன் தனக்குத்தானே போராடிப் புலன்கள்-பொறிகள் மீது, ஏன்? தனது ஆன்மாவின் மூலமே, ஆணை செலுத்துதற்குரிய தகுதி பெற வேண்டும். நாளும் ஆன்மாவை அரித்து அழிக்கும் ஆணவத்திலிருந்து விடுபடவேண்டும். ஆணவம்! ஆம்! அறியாமையின் திரண்ட வடிவமே ஆணவம்! ஆணவத்திலிருந்து விடுதலை பெற எல்லாம்வல்ல இறைவனுக்கு அடிமையாதல் வேண்டும். ஆண்டவனுக்குத் தொழும்பாய்