பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அப்பரடிகளின் போராட்டங்கள்

269


அடிமை செய்தல் வேண்டும். யார் மாட்டும் எளியராய்த் தாழ்வெனும் தன்மையுடன் பழகவேண்டும்.

அப்பரடிகள் அச்சமின்றி வாழ்ந்தவர். “அஞ்ச வருவது யாதொன்றும் இல்லை” என்றார். ஏன்? அச்சம் ஆசைகளின் சேய், அதிகாரத்தின் சேய். அப்பரடிகளுக்கு ஆசை ஏது? அவர் இனியன என்று கண்டவை இவை:

கனியினும் கட்டி பட்ட கரும்பினும்
பனிம லர்க்குழற் பாவைநல் லாரினும்
தனிமுடி கவித் தாளும் அரசினும்.....
இனியன் தன்னடைந் தார்க்கிடை மருதனே!

என்பது அப்பரடிகள் திருவாக்கு. இத்தகு பழுதிலாத் துறவு சார்ந்த உள்ளத்தினருக்கு ஏது அச்சம்? அச்சம் இல்லாமையால் அரசின் ஆணையை ஏற்க மறுக்கிறார். தாம் யாருடைய ஆட்சிக்கும் அடங்கி வாழவேண்டிய அவசியமில்லை என்கிறார்;

நாமார்க்கும் குடியல்லோம் நமனை யஞ்சோம்
நரகத்தில் இடர்ப்படோம் நடலை யில்லோம் .
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோம் அல்லோம்
இன்பமே எந்நாளும் துன்ப மில்லை
தாமார்க்கும் குடியல்லாத் தன்மை யான
சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதிற்
கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்
கொய்ம்மலர்ச் சேவடியினையே குறுகி னோமே!

என்று வீரமும் விவேகமும் அருள்ஞானமும் கலந்த நிலையில் பல்லவப் பேரரசின் துதுவர்களுக்குப் பதில் கூறுகின்றார் அப்பரடிகள். இந்த வீரம், துணிவு எங்கிருந்து கிடைத்தது, அல்லது பெற்றார் அப்பரடிகள்? இறைவனுக்குத் தொழும்பு பூண்ட பெற்றிமையால் வந்தது. இந்தத் துணிவு என்பதை