பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அப்பரடிகளின் போராட்டங்கள்

273


சாத்திரம் பல பேசும் சழக்கர்காள்
கோத்திரமும் குலமும் கொண்டென் செய்வீர்
பாத்தி ரம்சிவ மென்று பணிதிரேல்
மாத்தி ரைக்குள் அருளுமாற் பேறரே

என்பது அப்பரடிகள் வாக்கு தீண்டாமை விலக்கு, சாதி வேற்றுமைகளை அகற்றுவதில் தமிழக வரலாற்றில் முதற் போராளி அப்பரடிகளே என்று துணியலாம். ஏன்? இந்திய வரலாற்றிலேயேகூட அப்பரடிகள்தான் முதற் போராளி!

அடுத்து, மனித குலத்தை வருத்தும் தீமை, வறுமை - ஏழ்மை! நமது சமுதாயம் ஒருவிதமான அமைப்பு. வளமும் வறுமையும் அருகருகில் நிலவும்-வள்ளல்களும் வறியவர்களும் வாழும் நாடு. இந்த வறுமை தொடர்ந்து இருந்து வருவது. பொருளியல் சித்தாந்தத்தில் தனி உடைமைச் சமுதாயம்-அமைப்புத் தோன்றிய காலத்திலிருந்தே வறுமை கால்கொண்டு வளர்ந்துவருகிறது. வல்லாளர்கள் உடைமை சேர்ப்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள். வல்லமை இல்லாதவர்கள் இருப்பதையும் இழக்கின்றனர். தனியுடைமைச் சமுதாயம் இருக்கும் வரை வறுமை நிலவும். பொதுவுடைமைச் சமுதாயம் கண்டாலும் மனிதன், உடைமை ஆர்வமே காட்டாமல்-முழுமையான உழைப்பாளியாக வாழாமல் “பொதுவுடைமைதானே” என்று அலட்சியமாக இருக்கிறான். இன்று சோவியத் வரலாறு தரும் படிப்பினை என்ன? ஏன்? நமது நாட்டில் நடப்பது என்ன? நாட்டின் பெயரால் வாழ்கிறவர்கள்கூட நாட்டைத் திருடத்தான் நினைக்கிறார்கள்; திருடுகிறார்கள்; திருடிக் கொண்டிருக்கிறார்கள். இந்திய சமூகத்தில் தனிமனித உணர்வு பூதாகாரமாக வளர்ந்து வருகிறது. ஊர், நாடு என்ற சமூக உணர்வு இளைத்துப் போய்விட்டது. அதனால் அப்பரடிகள் தனியுடைமைச் சமுதாயம், பொதுவுடைமைச் சமுதாயம் என்ற இரண்டு அமைப்பையும் சாராமல் ஒரு புது

கு.இ.VII.18