பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

276

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


என்றும் அப்பரடிகள் அருளிச் செய்துள்ள பாடல்கள் பழைமைக்கு வைத்த தீ அல்லவா?

ஏன்? இன்னும் ஒருபடி மேலே சென்று நூல், புல், கூர்ச்சம் முதலியன வேண்டுமா, என்றும் அறைகூவல் விடுகின்றார். பழைய பொருளற்ற சடங்குகளை எதிர்த்துப் போராடிய சமயத் தலைவர் அப்பரடிகள்.

அப்பரடிகள் தமிழுணர்வுடையார்; தமிழாசிரியர். ஆனாலும் மனிதகுல ஒருமைநலம் கருதி எல்லா மொழிகளையும் இனங்களையும் தமிழ், தமிழர் என்னும் தனித் தன்மைக்குப் பழுதின்றி ஏற்றவர்; அங்கீகரித்தவர். மொழி ஆதிக்கமும் இன மேலாதிக்கமும் ஒருமை நலனைக் கெடுக்கும் என்ற உண்மையை அப்பரடிகள் அறிந்தவர்; உணர்ந்தவர்.

வடமொழியும் தென்தமிழும் ஆனான் கண்டாய்

என்றும்

ஆரியன் கண்டாய்! தமிழன் கண்டாய்!

என்றும் அருளி வேறு வேறாந் தன்மையையும் கடவுள் முன்னிலையில் அனைவரும் ஒன்றாந் தன்மையையும் விளக்கும் பான்மை அற்புதமானது. இன மேலாண்மை, இன ஒதுக்கல், இன இழிவு ஆகிய பொருந்தாக் கொள்கைகளை அப்பரடிகள் ஏற்காது மறுத்துப் போராடிய பெருந்தகை என்பதறிக.

அப்பரடிகள் தனது ஆத்ம நாயகனாக, உயிர்ப்பாக விளங்கிய இறைவனிடமும் போராடியுள்ளார். இறைவனிடம் இவர் நிகழ்த்திய போராட்டம் வாழ்வைப் பற்றியதல்ல. தூய்மையான அர்ப்பணிப்பு, அடையாளம் இவற்றுக்காகவே போராடினார். தனது ஆன்மா, தூய்மையாயிற்று, அவ்வழி உடலும் துய்மையாயிற்று என்ற அடையாளம் காட்ட, அடையாளம் வைக்க வேண்டுகின்றார். இந்த அடை-