பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
30
ஜீவா பார்வையில் அப்பரும்
மணிவாசகரும்

அமரர் ஜீவா பொதுவுடைமைச் சித்தாந்தத்தில் துறை போய அறிஞர். பொதுவுடைமை வாழ்க்கையை இப்பூவுலகம் முழுதும் வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே வாழ்ந்தவர். தாமரைத்தண்டு மண்ணோடு தொடர்பு கொண்டேயிருக்கிறது. அதன் மலர் விண்ணிலே உலவும் கதிரவனை நோக்கி மலர்கிறது. விண்ணுக்கும் மண்ணுக்கும் ஒர் அரிய இணைப்பை அங்கு பார்க்கிறோம். அதுபோல, அமரர் ஜீவாவின் சிந்தனைக் கால்கள் தமிழக நாகரிகத்திலேயே பரவிநின்றன. ஆயினும் அவர் சிந்தனை மார்க்சிய சித்தாந்தத்தை நோக்கி மலர்ந்தது. இவ்விரு கருத்துக்களுமிடையே எழுத்தால்- பேச்சால் இணைப் பூட்டின இணையற்ற சிற்பி அமரர் ஜீவா. அவர்தம் வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரிரு சம்பவங்களைப் பின்னணியாகக்கொண்டே இக்கட்டுரை அமைகின்றது.

திருச்சி தேவர் மன்றம் விழாக்கோலம் பூண்டு விளங்குகிறது. 20-ஆம் நூற்றாண்டின் சமய மறுமலர்ச்சி இயக்கமாகிய அருள்நெறித் திருக்கூட்டத்தில் கொடிகள் அரங்கை அலங்கரித்திருந்தன. நெற்றி நிறைய நீறு பூசிய