பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/291

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ஜீவா பார்வையில் அப்பரும் மணிவாசகரும்
287
 

சட்டத்தின்மூலம் கொண்டு வரலாம்-மக்களாட்சிமுறை நடைபெறும் நாட்டில் கருத்து வளர்ச்சி-மனமாற்றத்தின் மூலமே கொண்டுவரவேண்டும் என்ற நம்பிக்கை அமரர் ஜீவாவுக்கு உண்டு. அதற்கெனவே, அவர் 'கலை இலக்கியப் பெருமன்றத்தை'க் கண்டார். பட்டிதொட்டிகளில் தமிழகப் பண்பாட்டை முற்போக்கு அணியின் சார்பில் பரப்ப அமைப்பினைக் கண்டார். நாளும் வளர்த்தார். அந்தப் பணியைத் தொடர்ந்து செய்யும் பொறுப்பை ஏற்றுக் கொண்ட கலை இலக்கியப் பெருமன்றத்திற்கு நமது பாராட்டுக்கள்!

இறைவனைப் பெறுவது எப்படி? பிற சமயங்கள் 'தட்டினால் கதவு திறக்கப்படும்' என்று சொல்லும். தட்டும் சக்தி வந்துவிட்டால் கதவு திறக்க இன்னொருவரும் வேண்டுமோ? தட்டும் பதவி பெற்ற ஒருவர் அக் கதவினை உதைத்து, உடைத்து உள்ளே நுழைய முடியாதோ? மேலும் தட்டின பிறகு கதவு திறப்பதில் என்ன பெருமை இருக்கிறது? அதற்குக் கருணை என்றா பெயர்? வலிய உதவி செய்யும் (Volunteer Service) பண்பே வாழ்த்தப் பெறுகிறது. நம்முடைய வழிபடும் தெய்வமாகிய முருகன், தட்டாமலேயே கதவு திறப்பவன்; அதனாலன்றோ ‘அவனருளாலே அவன் தாள் வணங்கி' என்று திருவாசகம் பேசுகிறது! நாம் திருவருளைப் பெறவேண்டும். அவ்வின்பத்தைப் பெற்று வாழவேண்டும் என்று விரும்பி முனைவதைவிட நமக்கு அத்திருவருள் நலத்தை வாரி வழங்கவேண்டும் என்றே திருவுளங் கொண்டுள்ளான் முருகன். வந்த பிறகு வாரி வழங்கவில்லை. இதைத்தான் 'வாரி வழங்குகின்றான் வந்து முந்துமினே' என்கிறார் மாணிக்கவாசகர். இக்கருத்தினைத் திருவாசகத்தில் பல இடங்களில் பரக்கக் காண்கின்றோம். இறைவன் திருவருள் வழங்குகின்றமையைப் 'பால் நினைந் துட்டும் தாயினும் சாலப் பரிந்துTட்டும்' என்கிறார். அழுதபின் ஊட்டும் தாய் அவ்வளவு சிறப்புடையளல்லள். அழாமலேயே காலத்தையும் பசியையும் கருத்திற் கொண்டு