பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
31
திருநாவுக்கரசர்


தமிழகம், வழிவழி வரலாற்றுச் சிறப்புடையது. தமிழகம், அரசியல் வரலாற்றுச் சிறப்புக்கள், மிகுதியும் பெறாது போனாலும், அருளியல் துறையில் இந்தியத் துணைக் கண்டத்தில் தனிச் சிறப்புடைய வரலாறு பெற்றதாகும். பேசும் மொழியையும், கொண்டு ஒழுகிய நெறியையும் வாழ்க்கையோடு இசைத்த பெருமை தமிழர்க்கு உண்டு. வாழ்க்கை வேறு; மொழி வேறு; சமயம் வேறு என்ற நிலை தமிழகத்தில் என்றும் இருந்ததில்லை. தமிழ் இலக்கியங்கள் வாழ்க்கையை மையமாகக் கொண்டே தோன்றின. சமய நெறியும் அங்ஙனமேதான். அதனாலன்றோ சேக்கிழார் தமிழகச் சமய நெறியினைச் "செழுந்தமிழ் வழக்கு” என்று போற்றுகின்றார்.

இங்ஙனம், சமய நெறியில் வழிவழி வரலாற்றுச் சிறப்புக்கள் உள. என்றாலும், இடையில் சமய சமுதாய வாழ்க்கையில் தொய்வு தோன்றாமல் இருந்துவிடவில்லை. சமய நெறியை மேற்கொண்டு ஒழுகுவதில் ஏற்பட்ட தொய்வுகளையும், தூயநெறியல்லாத பொய்ந் நெறி நுழைவையும் அயல் வழக்கின் குறுக்கீட்டையும் நீக்கித்