பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/302

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
298
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
 

போதொடு நீர்சுமந் தேத்திப்
புகுவார் அவர்பின் புகுவேன்
யாதும் சுவடு படாமல்
ஐயா றடைகின்ற போது
காதல் மடப்பிடி யோடும்
களிறு வருவன கண்டேன்
கண்டேன் அவர்திருப் பாதம்
கண்டறி யாதன கண்டேன்

என்று குறிப்பிடுகின்றார்.

அப்பரடிகள், சாதி வேற்றுமைகளைக் கடிந்ததோடு மட்டுமன்றிப் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளையும் வெறுத்தார். சமூகப் பொருளாதாரக் கொள்கையில் “தர்ம கர்த்தா முறை” என்பது ஒரு கொள்கை. இந்தக் கொள்கையை மனித குலத்திற்குத் தெளிவான வகையில் அறிமுகப் படுத்தியவர் அப்பரடிகள். இந்தத் தர்மகர்த்தாக் கொள்கை வழியில்தான், அண்ணல் காந்தியடிகளும் இந்திய சமூகத்தை வழி நடத்தினார். தர்மகர்த்தாக் கொள்கை 14, 15ஆம் நூற்றாண்டில் தான், உலகிற்குப் பரவலாக அறிமுகம் செய்து வைக்கப்பெற்றது. தர்ம கர்த்தாக் கொள்கை வழியில், செல்வம் யாரிடம் இருந்தாலும் அச் செல்வம் மக்களுடையதே, மக்களே அச்செல்வத்தை அனுபவித்தற்குரியவர். செல்வத்தை உரிமையாகப் பெற்றவர்கள் செல்வத்தைப் பேணிப் பாதுகாத்து மக்களுக்கு வழங்கும் கடமை பூண்டவர்களே; செல்வத்தின் உரிமை முற்றான அனுபவத்திற்கு வாயிலல்ல. இந்தத் தர்மகர்த்தாக் கொள்கையின் கரு, ஏழாம் நூற்றாண்டிலேயே அப்பரடிகளின் அருள்பழுத்த நெஞ்சில் தோன்றிவிட்டது.

மருத்துவர் ஒருவர் தமக்குரிய பொருளில் பல நூறு ரூபாய்க்கு மருந்துகளை வாங்கி மருத்துவ நிலையத்தில் வைத்திருக்கிறார். அந்த மருந்துகள் அவருக்குரியன என்பதில்