பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/306

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
302
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
 

முடிவுகளினும் மிக்குயர்ந்தன. நாள்தோறும் இத்திருவடித் திருத்தாண்டகத்தை ஒதுவோர் பக்தி நலத்திற்சிறந்து மேன்மையுறுவர். இது, முக்காலும் உண்மை.

அப்பரடிகளின் திருமுறைப் பாடல்கள் பத்திமை உணர்ச்சியில் வெளிவந்தவை யானாலும் “கைபுனைந் தியற்றாக் கவின்பெறு வனப்பே” போல இலக்கிய நயம் பொதுள அமைந்திருக்கின்றன. அப்பரடிகள் அருட்பெருஞ் சூலையினால் ஆட்கொள்ளப்பெற்ற பிறகு, திருவதிகையில் “கூற்றாயினவாறு” என்று முதற் பதிகம் பாடுகின்றார். அப்பதிகத்தில், தமிழகத்தின் அன்றிருந்த சமய நெறியின் குறைபாட்டினைக் குறிப்பில் உணர்த்துகின்றார். அப்பர் அடிகள் வழிவழிச் சிவநெறி மரபில் தோன்றியவர். ஆயினும், தமக்குப் புறச் சமயங்களின் இயல்பினையும், சிவநெறியின் சிறப்பினையும் எடுத்துக்கூறி நெறி நிறுத்தும் ஆசிரியர்கள் இல்லையே என்ற குறிப்பை உணர்த்துகின்றார். திலகவதியார் வழிவழி மரபில் அவரை வளர்த்தாரானாலும் சமய, தர்க்க விவாத முறையில் வளர்க்கவில்லை.

அன்று, சிவ நெறியில் நின்ற சான்றோர்கள் இங்ஙனம் தம்மை நெறி முறைப்படுத்திப் பாதுகாக்காமல், புறச் சமயத்தில் மூழ்கி, அளவு காணும்படி செய்து விட்டனர் என்று குறைபட்டுக்கொள்கின்றார். ஆம்: அப்பரடிகள் சிவநெறியிலிருந்து புறச் சமயத்திற்குச் சென்றபொழுது பரபரப்பில்லை; தேடுவாரில்லை. திலகவதியார் கவலைப்பட வில்லையா என்று கேட்கலாம். திலகவதியார் வருந்தியது உண்மை. திலகவதியார் வருத்தத்தைச் சமய உலகத்தின் வருத்தமாக ஏற்றுக்கொள்ள முடியாது. அது' உடன் பிறப்பு வழிப்பட்ட உணர்வு கலந்த பாசத்தின் வழிப்பட்டதே: ஆனால், அப்பரடிகள் புறச் சமயத்தினின்றும் சைவம் வந்தபோது, எவ்வளவு பரபரப்பு? அது சமய நிகழ்வாக மட்டுமல்லாமல் அரசியல் நிகழ்வாகவும் வடிவம் பெறும்