பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/308

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
304
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
 

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று

என்று ஒதுகிறார். திருக்குறள், ஆழமான கருத்துடையது. சுவைமிக்க கனி துய்த்தற்குரியதாக - உரிமையுடையதாக இயல்பில் இருக்கிறது. ஆனால், அறியாமையின் காரணமாக அந்தக் கனியினைத் துய்த்து மகிழாமல் துவர்க்கும் காயினை, துய்த்தற்குத் தகுதியில்லாத காயினை உரிமையில்லாத ஒன்றினை, உரிமையுடையோர் அறியாமல் கவர முயற்சி செய்வது ஏன் என்று கேட்கிறார். இனியன பேசுதல் இயற்கை இந்த இனிய குறளினை அப்பரடிகள் கனி இடத்தில் சிவநெறியினையும், காய் இடத்தில் புறச் சமயத்தினையும் எண்ணி, இசைத்துப் பாடுவது படித்து இன்புறுத்தக்கது.

மெய்யெலாம் வெண்ணிறு சண்ணித்த
மேனியான் தாள்தொ ழாதே
உய்யலாம் என்றெண்ணி உறிதூக்கி
உழிதந்தென் னுள்ளம் விட்டுக்
கொய்யுலா மலர்ச்சோலை குயில்கூவ
மயிலாடும் ஆரு ரரைக்
கையினாற் றொழாதொழிந்து கனியிருக்கக்
காய்கவர்ந்த கள்வ னேனே.

என்பது அத்திருப்பாட்டு.

அப்பரடிகள் சிறந்த உவமைகளின் மூலம் உண்மைகளை விளக்க வல்லவர். இன்றைய மனித சமுதாயத்தில் 'தனி உரிமை', 'பொது உரிமை' என்ற சொற்கள் பெரு வழக்கில் வழங்கப் பெறுகின்றன. தனி உரிமை - பொது உரிமை என்ற சொற்கள் பெருவழக்காதல் வளரும் சமுதாயத்திற்கு நல்ல தல்ல. 'ஏன்? தனி உரிமையும் பொது உரிமையும் இன்று ஒன்றோடொன்று மோதக்கூடச் செய்கின்றன. தனி உரிமையும், பொது உரிமையும் அரும்பும், மலரும்போல் ஒன்றை-