பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
32
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
 

வகையில் பத்திமை செய்தலே பாங்கான முறை. இதனைத் திருஞானசம்பந்தர்.

இறையூண் துகளோ(டு) இடுக்கண் எய்தி
இழிப்பாய வாழ்க்கை ஒழியத்தவம்
நிறையூண் நெறிகருதி நின்றீரெல்லாம்
நீள்கழ லேநாளும் நினைமின் சென்னிப்
பிறைசூழ் அலங்கல் இலங்கு கொன்றை
பிணையும் பெருமான் பிரியாத நீர்த்
துறைசூழ் கடந்தைத் தடங்கோயில் சேர்
தூங்கானை மாடந் தொழுமின்களே.

என்று பாடுகின்றார்.