பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/372

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
368
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
 யாரும் அறிய யான்ஆள
உரியான் உன்னை எனை இரந்தான்
வார்கொள் முலையாய்! நீஅவனை
மணத்தால் அணைவாய் மகிழ்ந்” தென்றார்!

(ஏயர்கோன் 239)

என்று பேசும் சேக்கிழார் வாக்கு நினைத்தின்புறத் தக்கது. இவ்வாறு கூறிய இறைவனிடம் சங்கிலியார், தம்பிரான் தோழருக்குத் திருவாரூரில் உள்ள ஈடுபாட்டை விண்ணப்பிக்கிறார்.

பெருமான் அதற்கு “உன்னைப் பிரியேன்” என்று ஆரூரன் சபதம் செய்து தருவான் என்று பதில் கூறுகிறார். அதன்பின் சிவபெருமான் தம்பிரான் தோழரிடம் வந்து “சங்கிலியார் தம்மைப் பிரியேன் என்று சபதம் செய்யுமாறு கேட்கிறாள்” என்றார்.

தம்பிரான் தோழர் திருவாரூர் மற்றும் தலங்களுக்குச் செல்லத் தடையாக அமையுமே என்று எண்ணிப் பெருமானிடம் “ஐய, எனை ஆண்ட தலைவ! சங்கிலியார்க்கு நான் சபதம் செய்யும் காலத்தில் நீ, கருவறையில் எழுந்தருளியில்லாமல் மகிழின் கீழ் எழுந்தருள வேண்டும்” என்று வேண்டுகிறார், இறைவன் முன் சபதம் செய்தலைத் தவிர்க்க!

இறைவன் முன்னால் செய்தால்தான் சபதமா? இறைவன், கருவறையில் மட்டும்தான் எழுந்தருளியுள்ளானா? மகிழ மரத்தடியில் இறைவன் இல்லையா?

இந்த வினாக்களுக்கு எல்லாம் கிடைக்கக்கூடிய ஒரே விடை, காதல் மீதூரும்பொழுது இவையெல்லாம் கவனத்திற்கு வாரா என்பதைத் தவிர வேறு என்ன?

அதன்பின், சங்கிலியாரிடம் இறைவன் நம்பியாரூரர் சபதம் செய்ய முன்வந்துள்ளார் என்று கூறியதுடன் “திருக்கோயில் கருவறை முன் சபதம் செய்யவேண்டாம். மகிழ மரத்தடியில் சத்தியம் செய்தால் போதும் என்று மகிழ