பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/376

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
372
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
 

யோர் கடன்! நீ என் பிழையைப் பொறுப்பாய் என்று எண்ணியே பிழை செய்தேன்! ஆனால், பிழை பொறுத்தருள் செய்ய மறுக்கிறாய்! இதனால் உனக்குப் பழி வாராதா?” என்று கேட்கிறார். திருவெண்பாக்கத்திறைவன் திருவுள்ளம் இரங்கிக் கோல் ஒன்று தந்தருள்கின்றான்.

மான்திகழும் சங்கிலியைத் தந்துவரு பயன்களெல்லாம்
தோன்றஅருள் செய்தவித்தாய் என்றுரைக்க உலகமெலாம்
ஈன்றவனே வெண்கோயில் இங்கிருந்தா யோஎன்ன
ஊன்றுவதோர் கோலருளி 'உளோம்போகீர்’ என்றானே!

(7. 89. 10)

என்ற பாடல் திருவெண்பாக்கத்திறைவன் ஊன்றுகோல் தந்தருளி “உளோம் போகீர்!” என்று ஒன்னலரிடம் - அதாவது பொருந்தாப் பகைவரிடம் பேசுவது போல் பேசி அனுப்பிவிடுகிறான் என்பதைக் குறிப்பிடுகிறது. மேலும் பல திருத்தலங்களையும் பணிந்தேத்திக் கொண்டு காஞ்சிபுரத்திற்குச் சென்று கச்சியேகம்பனைப் போற்றிப் பரவுகின்றார்.

கச்சியேகம்பன் நம்பியாரூரருக்கு இடக்கண்ணை அருளிச் செய்கிறான். இது உண்மையா? நம்பியாரூரர்க்கு இடக்கண்ணை அருளிச்செய்தவன் கச்சியேகம்பனா? அல்லது கச்சியேகம்பனின் பங்கிலுறையும் அன்னை காமாட்சியா? பெற்றது இடக்கண். ஆதலால், காமாட்சி அம்மையின் கருணை என்றே கருதவேண்டும். அன்னை தானே முந்திப் பொழிபவள் கருணையை! இதனை,

ஆலந்தா னுகந்து அமுதுசெய் தானை
ஆதியை அமரர் தொழுதேத்தும்
சீலந்தான் பெரிதும் உடையானைச்
சிந்திப்பார்.அவர் சிந்தையுள்ளானை
ஏல வார் குழலாள் உமை நங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற