பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/379

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சுந்தரர்
375
 


திகைத்தார்; விதிவிடங்கப் பெருமானைச் சரண் அடைந்தார்; துயர் தீர்க்குமாறு வேண்டினார்.

நள்ளிரவில் வீதிவிடங்கர் நம்பியாரூரரிடம் வந்து “என்ன நேரிட்டது! யாது துன்பம்?” என்று ஒன்றும் தெரியாதவர் போலக் கேட்கிறார்? பரவையார் சம்மதம் பெற்றுச் சங்கிலியாரைத் திருமணம் செய்திருக்கலாம். அப்படிச் செய்யவில்லை.

ஏன்? நம்பியாரூரர் வரலாறு நீடிக்கவேண்டும் என்பது நோக்கம்! நம்பியாரூரரின் தோழமைத் திறத்திலும் தண்டமிழிலும் தோய்ந்து மகிழ இயலாமல் போகுமே! நம்பியாரூரரின் தவிப்பை, அதன்மூலம் அவர் தம் இசைத் தமிழை அனுபவிப்பதில் இறைவனுக்கு ஆர்வம் அதிகம்! அது போகட்டும்.

திருவாரூருக்கு நம்பியாருரர் வந்த பிறகாவது இறைவன் தாமே வலியச் சென்று பரவையார் புலவியைத் தீர்த்து வைத்திருக்கக்கூடாதா? “கூடலையாற்றுாருக்கு வா” என்று அழைத்து வழிகாட்டி முன் செல்ல முடிகிறது. பரவையார் புலவியைக் காலத்தால் தீர்த்திருக்கக்கூடாதா? வேண்டி நிற்கும்பொழுதும் ஒன்றும் அறியாதவர்போல் யாது துயர் என்று கேட்கிலார் வீதிவிடங்கர்.

பரவையார் புலவியைத் தணிக்கச் சைவ அந்தணர் கோலத்தில் பரவையார் வீட்டுக்குச் செல்கிறான் இறைவன். பரவையார் உடன்படவில்லை. முதல் சுற்றில் பரவையார் உடன்படவேண்டும் என்று திருவாரூர் இறைவனே விரும்ப வில்லை. அப்படி விரும்பியிருந்தால் வீதிவிடங்கப் பெருமான் தன் உருவத்துடனேயே சென்றிருப்பான் - வீதிவிடங்கனாகவே சென்றருளியிருப்பான்; பரவையார் மறுத்திருக்க மாட்டார்.

திருவாரூர் இறைவனுக்குப் பரவையார் புலவி நீடிக்க வேண்டும். நம்பியாரூரரின் தவிப்பு கூடுதலாக வேண்டும். அடுத்து, நம்பியாரூரரின் உள்ளத்தில் எழும் தூய அன்பில்