பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தரர்

379




படியா இவை சுற்றுவல்ல அடியார்
பரங்குன்றம் மேய பரமன் அடிக்கே
குடியாகி வானோர்க்கும் ஒர்கோவும் ஆகிக்
குலவேந்தராய் விண்முழுதும் ஆள்பவரே

(7.2.1)

இப்பாடல் நம்பியாரூரர் வரலாற்றுக்கு ஒரு சிறந்த அகச் சான்று. பாண்டிய நாட்டுத் திருப்பதிகள் பலவும் வணங்கிய நிலையில் சேரமான் பெருமான், சேரநாட்டுக்கு எழுந்தருளும் படி வேண்டி நின்றார்.

சேரமான் தோழரும் உடன்பட்டுச் சேரமான் பெருமானுடன் எழுந்தருளிச் செல்லும் வழியில் காவிரி வெள்ளத்தைக் கடந்து கரையேறி ஐயாற்றிறைவனை வணங்கிக் கொங்கு நாட்டைக் கடந்து சேர நன்னாடு அடைந்தனர்.

சேர நன்னாட்டில் திருவஞ்சைக்களத் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள இறைவனைப் போற்றி வணங்கினார். சேர நன்னாட்டில் சேரமான் தோழருக்கு அரச வரவேற்பு வழங்கப் பெற்றது. சேரமான் தோழருக்குத் திருவாரூர் நினைவு வந்துவிட்டது.

பொன்னும் மெய்ப் பொருளும் தருவானைப்
போகமும் திருவும் புணர்ப்பானைப்
பின்னை என் பிழையைப் பொறுப்பானைப்
பிழையெல்லாம் தவிரப் பணிப்பானை
இன்ன தன்மையன் என்றறி யொண்ணா
எம்மானை எளிவந்த பிரானை
அன்னம் வைகும் வயற் பழனத்தணி
ஆரூரானை மறக்கலும் ஆமே,

(7.59.1)

என நினைந்து பாடினார். இப்பாடல் மூலம் இறைவன் ஆன்மாவை ஆணவத்தின்-ஆதிக்கத்திலிருந்து மீட்பதற்கான மாயா கன்ம மலங்களை அதாவது, பொன், போகம் முதலியவற்றை ஆன்மாவுக்குக் கூட்டுவித்துப் பக்குவப்-