பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
35


திருமுறையின் ஆற்றல்

தமிழ் இலக்கிய மரபுகள் மரணத்தை வென்ற மரபுகளாகும். “கூற்றம் குதித்தலும் கைகூடும்” என்று திருக்குறள் கூறுகிறது. பக்குடுக்கை நன்கணியார் என்ற சங்ககாலப் புலவர்,

ஓரில் நெய்தல் கறங்க ஓரில்
ஈர்ந்தண் முழுவின் பாணி ததும்பப்
புணர்ந்தோர் பூவணி அணியப் பிரிந்தோர்
பைத லுண்கண் பணிவார் புறைப்பப்
படைத்தோன் மன்றஅப் பண்பி லாளன்
இன்னா தம்மஇவ் வுலகம்
இனிய காண்க.இதன் இயல்புணர்ந் தோரே!

என்று பாடினார். இதனால் துன்பம் இயற்கை; மரணம் இயற்கை என்ற கருத்துக்களில் நம்பிக்கைகளில் தமிழருக்கு நம்பிக்கை இல்லை. இதுமட்டுமல்ல. மனிதனுக்கு வாய்க்கும் துன்பத்திற்குக் கடவுள் காரணம் அல்ல என்ற முற்போக்கான சிந்தனை தமிழருக்கு இருந்தது. இந்த உலக இயற்கை துன்பம் சூழ்ந்ததாக இருக்கலாம். ஆனாலும் துன்ப உலகத்தை இனிய உலகமாக மாற்றிப் புதியதோர் உலகம்