பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/404

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
400
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
 


உடலும்கூட முதலையால் ஜீரணிக்கப் பெற்றுவிட்டது. இந்த நிலையில் நம்பியாரூரர் “தலைக்குத் தலைமாலை” என்று பதிகம் எடுத்துப் பாடுகின்றார். மறைமொழி அல்லவா? திருவருளாற்றல் செறியப் பெற்ற சொற்கள் அல்லவா? அதனால் குளத்தில் தண்ணிர் நிரம்புகிறது! முதலையும் வருகிறது! அந்த முதலை, தான் உண்ட பாலனை உமிழ்கிறது! பெற்றோருக்கு எல்லையற்ற மகிழ்ச்சி!

இங்ஙனம் திருமுறை சாம்பலுக்குப் பெண்ணுருக் கொடுத்தும், உயர் பிரிந்த உடலுக்கு உயிர் கொடுத்தும் அடுத்து உடலும் இல்லாத நிலையில் உடலை வரவழைத்தும் கொடுத்தது. இது திருநெறிய தமிழுக்குரிய ஆற்றல். இன்று தமிழ் மக்கள் திருநெறிய தமிழை ஒதினால் வீறும் பெறலாம்; வளம் பெறலாம்; வாழ்நாள் பெறலாம்.


குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf