பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



9
கூசாதுரைக்கும் சொல்!

பொய்! அம்மம்ம! அது இன்றைக்குப் பெற்றிருக்கும் செல்வாக்குக்கு எல்லையே இல்லை. எங்கும் இன்று பொய் நடமாடுகிறது; ஆட்டம் ஆடுகிறது. இன்றையப் பேச்சுலகில் உண்மைக் கலப்பும் இருக்கலாம். ஆனால் பொய்யே முதல்! இன்றைய மனிதன் பொய்யைப் புதுப்பாணியாக்கிவிட்டான். வள்ளுவன் கூறியதைப்போல் பொய்யைச் சொல்வன்மை, ஒப்பனை செய்து காப்பாற்றி வருகிறது. அதுமட்டுமா? “பொய் சொல்லலாம் என்று வள்ளுவரே கூறியிருக்கிறார்.” இப்படி ஓர் ஆதரவுப்படலம்! ஆம்! ‘பொய்ம்மையும் வாய்மையிடத்த’என்று வள்ளுவர் கூறியது உண்மை. ஆனால், பொய் வாய்மையாகிறது என்பது வள்ளுவத்தின் கருத்தல்ல. பொய், பொய்யேதான்! ஆனால், விளையும் பயன் நோக்கி வாய்மையிடத்தில் வைத்தெண்ணலாம் என்பதேயாம். ஆம்! சொல்லும் செயலும் பயன் நோக்குடையன. என்ன பயன்? உயிர்த்தகுதி மேம்பாடு அடைய வேண்டும். உயிர்கள் அறத்தில் அருளில் தூய்மையில், வாய்மையில் தோய்ந்து வளர்தல் வேண்டும். செடிக்கு நீரூற்றுதல் செயல். அதன் பயனாகச் செடி வளரவேண்டும். கரும்பலகையில் எழுதுதல் செயல் - சடங்கு. அதன் பயன் கரும்பலகையில் எழுதுவதைச்