பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

துறவு எது?

59


பழுக்கவேண்டும். ‘பழுத்த மனத்து அடியார்’ என்பார் மாணிக்கவாசகர். இன்றோ உடல் பழுத்திருக்கிறது; உடை பழுத்துக் காட்டுகிறது; ஆனாலும் உள்ளம் பழுக்கவில்லை! ஆங்காரம் பிடித்தாட்டுகிறது. இவர்கள் திருஞான சம்பந்தர் கூறிய துறக்கக் கூடாத ஒன்றைத் துறந்துவிட்டனர். ஆதலால் இவர்கள் இன்னும் ‘துறவியல்ல இனிமேலும் துறவியாதல் அரிது. உண்மைத் துறவியாக வேண்டுமா? திருஞானசம்பந்தர் கூறுவதைப்போல இறைவன் திருநாமத்தை நினைப்பற நினைந்து ஏத்துங்கள்! அந்தச் சீலமே துறவாக்கும். இதனைத் திருஞானசம்பந்தர்,

பிறவி யறுப்பீர்காள்! அறவனாரூரை
மறவா தேத்துமின், துறவியாகுமே!

என்று பாடுகின்றார்.