பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/90

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
20
பொய்யிலா அடிமை

அடிமை என்ற சொல்லின்மீது அண்மைக் காலமாக அரசியல் உலகத்திற்கு வெறுப்பு அதிகம். ஆம்! அடிமை வாழ்க்கையை அகற்றவே உலகம் முழுதும் எல்லா நாடுகளிலும் போராடினார்கள். மக்களின் அடிமைத் தளையை அறுத்தெறிந்த ஃபிரெஞ்சுப் புரட்சியும், அமெரிக்கப் புரட்சியும், சோவியத் புரட்சியும், இந்திய விடுதலைப் புரட்சியும் மனித உலக வரலாற்றின் மைல் கற்கள்; திருப்பு மையங்கள். நீங்கா நினைவுகள்! இங்ஙனம் ஒருபுறம் அடிமைத் தளையை அறுத்தெரியும் முயற்சி ஆவேசத்தோடு வெற்றி பெற்று வருகிறது! அதே போழ்து அருளாளர்கள் மையத்தில் அடிமை ஆர்வம்! ஏன் இந்த முரண்பாடு? விடுதலைக் கவிஞர் பாரதியும் கூட,

பூமியில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம்-பரி
பூரணனுக்கே அடிமை செய்து வாழ்வோம்

என்றார். ஏன்? உலகியலில் ஒரு மனிதன் பிறிதொரு மனிதனுக்கு அடிமையாவது, வயிற்றுப் பிழைப்புக்காக! ‘வயிறு பிழைத்தல்’ என்பதே எண்ணியும் பார்க்க முடியாத கேவல வாழ்க்கை! தன்னறிவில், தன் திறனில்,