பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/93

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பொய்யிலா அடிமை
89
 

எங்ஙனம் தவிர்க்க முடியும்? பொய்யடிமைத்தனமே அரியணையும் ஏறி விட்டது; உபதேசங்களை உதிர்க்கின்றது. நாமெல்லாம் எளியவர்கள். என் செய்ய? புரட்சி தேவை. அருளியலில் பொய்யடிமை பூண்டொழுகுவோர் அறவே அகற்றப் பெறவேண்டும். இதுவே திருஞானசம்பந்தரின் திருவுள்ளம்.

கையளிவையர் மெல்விரல்லவை காட்டி யம்மலர்க்
காந்தளங்குறி பையராவிரிவும் புற வார்பனங் காட்டூர்
மெய்யரிவையொர் பாகமாகவு மேவினாய்கழ லேத்தி
நாடொறும் பொய்யிலாவடிமை புரிந்தார்க் கருளாயே.

- திருஞானசம்பந்தர்