பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/94

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


21
உய்யும் நெறி

மனித உலகு தொடங்கிய காலந்தொட்டு ஓயாது ஒரு போர் நடந்துகொண்டிருக்கிறது. போர் ஒன்றல்ல பலப்பல. ஆனாலும் போருக்குரிய அடிப்படை ஒன்றேயாம். இருளுக்கும் ஒளிக்குமிடையே போர். அறியாமைக்கும் அறிவுக்குமிடையே போர். ஆணவத்திற்கும் அடக்கத்திற்குமிடையே போர். துன்பத்திற்கும் இன்பத்திற்குமிடையே போர். பிறப்புக்கும் இறப்புக்குமிடையே போர். இந்தப் போர்கள் ஒவ்வொரு தனிமனிதனிடத்திலேயும் நாள்தோறும் - இல்லை, நாழிகை தோறும் நடந்துகொண்டேயிருக்கின்றன. அமரர்-அசுரர் சண்டை களங்களில் மட்டுமல்ல, நம்முடைய நெஞ்சக் களத்திலேயும் நடந்துகொண்டிருக்கிறது. இந்தப் போரில் வெற்றிபெற விழிப்புணர்வு தேவை; உழைப்பார்வம் தேவை. ஓயாது தொழிற்படும்இயல்பு தேவை. இச்சைகளுக்கு எளிதில் ஆளாகக் கூடாது. மயக்கம் மதியைக் கெடுக்கும். பொறிகளின் வலிமை புன்தொழிலை வளர்க்கும். புலன்களின் தூய்மை புண்ணியத்தைச் சேர்க்கும். ஏறி ஆடுவது, கழைக்கூத்து ஆனாலும், காசில் குறிக்கோள் இருப்பதைப் போல எத்தொழில் செய்தாலும் இறைவனிடத்தில் ஒன்றிய சிந்தனை தேவை. நமது பகைமை எளிதான ஒன்றல்ல. அம்மம்ம! செழு